சில வரி செய்திகள்

Added : அக் 13, 2021
Share
Advertisement
அச்சத்தில் குற்றவாளி தற்கொலைஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டம் கோட்புட்லி நகருக்குள், தலைமறைவான குற்றவாளிகள் சிலர் நுழைய இருப்பதாக, நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனைகளைத் தீவிரப்படுத்திய போலீசார், அவர்களின் வாகனத்தை மறித்தனர்.குற்றவாளிகள் தப்பி ஓடியதால் போலீசார் விரட்டிச் சென்றனர். போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில், கொலை

அச்சத்தில் குற்றவாளி தற்கொலை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டம் கோட்புட்லி நகருக்குள், தலைமறைவான குற்றவாளிகள் சிலர் நுழைய இருப்பதாக, நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனைகளைத் தீவிரப்படுத்திய போலீசார், அவர்களின் வாகனத்தை மறித்தனர்.

குற்றவாளிகள் தப்பி ஓடியதால் போலீசார் விரட்டிச் சென்றனர். போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில், கொலை வழக்கில் தலைமறைவான சுகா என்ற ரூப்சந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மாமனார், மைத்துனர் கொலை

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரம் பூஜப்புரா பகுதியைச் சேர்ந்தவர் அருண், 31. இவர் அதிகமாக மது அருந்தியதால், ஆத்திரம் அடைந்த மனைவி தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியை திரும்ப அழைத்து வர, நேற்று முன்தினம் போதையில் சென்ற அருண், மைத்துனர் அகில், 24, மாமனார் சுனில், 48, ஆகியோருடன் தகராறு செய்துள்ளார். அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அருண், மாமனார், மைத்துனரை கத்தியால் குத்திக் கொன்றார். தகவல் அறிந்த போலீசார், அருணை கைது செய்தனர்.பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் கைதுஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் உட்பட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு செயல்படும் பயங்கரவாதிகளை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர் தீவிரமாக தேடுகின்றனர்.

இதன்படி காஷ்மீரின் புல்வாமா, ஷோபியான், ஸ்ரீநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.அப்போது, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட வசீம் அஹ்மத் சோபி, தாரிக் அஹ்மத் தார், பிலால் அஹ்மத் மிர் மற்றும் தாரிக் அஹ்மத் பாபண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிறுவனுக்கு பாலியல் கொடுமை

பரேலி: உத்தர பிரதேசத்தின் மவுலானா மாவட்டம் கோட் பகுதியில் 9 வயது முஸ்லிம் சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது மவுலானாவிடம் மதக் கல்வி பயின்று வந்தார். சமீபத்தில் சிறுவனிடம் முறைகேடாக பாலியல் வன்கொடுமை செய்த மவுலானா, அது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, பெற்றோர் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மவுலானாவை கைது செய்தனர். சி.பி.ஐ., சம்மன்: எதிர்க்கும் மஹா., அரசுமும்பை: மஹாராஷ்டிராவில் ஊழல் புகாரால் பதவி விலகிய முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ., சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, மாநில தலைமை செயலர் சீதாராம் குன்டே மற்றும் போலீஸ் டி.ஜி.பி., சஞ்சய் பாண்டே ஆகியோருக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.அந்த சம்மனை எதிர்த்து, மாநில அரசின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணை 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X