சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

எந்த சாமி புண்ணியமோ...?

Added : அக் 13, 2021
Share
Advertisement
எந்த சாமி புண்ணியமோ...?'நல்ல வேளை தப்பித்தேன்...' என, பீதியுடன் கூறுகிறார், சமாஜ்வாதி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ். இங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லக்கிம்பூரில் சமீபத்தில் பெரும் கலவரம் நடந்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக,

அக்கம் பக்கம்


எந்த சாமி புண்ணியமோ...?



'நல்ல வேளை தப்பித்தேன்...' என, பீதியுடன் கூறுகிறார், சமாஜ்வாதி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ். இங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லக்கிம்பூரில் சமீபத்தில் பெரும் கலவரம் நடந்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அஜய் மிஷ்ராவின் மகனை கைது செய்ய வலியுறுத்தி, மாநிலம் முழுதும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். அகிலேஷ் யாதவும், தங்கள் கட்சியினரை திரட்டி லக்னோவில் போராட்டம் நடத்தினார். லக்கிம்பூருக்கு செல்ல முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். கோபமடைந்த கட்சி தொண்டர்கள் அந்த பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்தனர். போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர். நிலைமை மோசமானதால், அகிலேஷ் யாதவ் ஓடிவந்து, கட்சியினரை கலைந்து போகச் செய்தார். வன்முறையில் ஈடுபட்டதாக சமாஜ்வாதி கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'இன்னும் கொஞ்சம் நேரம் விட்டிருந்தால், இரண்டு, மூன்று பேராவது இறந்திருப்பர். என் மீதும் கொலை வழக்கு போட்டு உள்ளே தள்ளியிருப்பர். அப்புறம் வாழ்நாள் முழுவதையும் ஜெயிலுக்குள்ளே கழித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். எந்த சாமி புண்ணியமோ தப்பிச்சேன்...' என, பெருமூச்சு விடுகிறார்
அகிலேஷ் யாதவ்.


இனியாவது அடங்குவாரா?



'எத்தனை நாளைக்கு தான் கட்சி மேலிடத்திடமிருந்து இவரை காப்பாற்றுவது' என, மத்திய பிரதேச மாநில பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமேஷ்வர் சர்மாவைப் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர் அந்த கட்சி நிர்வாகிகள்.ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கட்சியின் மூத்த நிர்வாகியான ராமேஷ்வர் சர்மா, எப்போதுமே வில்லங்கமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் பல நேரங்களில் கட்சி மேலிட தலைவர்கள் இவர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடும்போது, ம.பி., யைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சமாதானப்படுத்தி, இவரை காப்பாற்றுவர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இவர், முகலாய மன்னர் அக்பரின் மனைவி ஜோதா அக்பர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.ஜோதா அக்பர், ராஜஸ்தானின் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர். அக்பரை காதலித்து மணந்தவர். ஜோதா அக்பரை பற்றி பேசுவதாக கருதி, ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவர்களை அவமதிப்பது போல் பேசி விட்டார்.
இதனால், வட மாநிலங்களில் வசிக்கும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் இறங்கினர். பீதியடைந்த ராமேஷ்வர் சர்மா, ராஜபுத்திர சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதுடன், அவர்களைப் பற்றி புகழ்ந்தும் பேசினார்.
'இனியாவது வாயை அடக்க வேண்டும்; இல்லையெனில் ராமேஷ்வர் சர்மாவுக்கு சிக்கல் தான்' என்கின்றனர், ம.பி., மாநில பா.ஜ., வினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X