டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : அக் 13, 2021 | கருத்துகள் (1)
Share
தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்: 'நாம் தமிழர்' என்ற கட்சி, அரசியல் ரீதியாக செயல்படும் ஒரு துக்கடா கட்சி. பிரபாகரன், வீரப்பன் என தனிப்பெருமை பேசும் இளைஞர்களை மூளை, சலவை செய்து வருகிறது. இவர்களின் தமிழ் உணர்வுக்கு யாரும் ஆதரவு தெரிவிப்பதில்லை. எனினும், அந்த கட்சிக்கும் கொஞ்சம் ஓட்டு உள்ளது.'டவுட்' தனபாலு: தி.மு.க.,வினரும், காங்கிரசாரும், நாம் தமிழர் என்ற கட்சி

'டவுட்' தனபாலு

தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்: 'நாம் தமிழர்' என்ற கட்சி, அரசியல் ரீதியாக செயல்படும் ஒரு துக்கடா கட்சி. பிரபாகரன், வீரப்பன் என தனிப்பெருமை பேசும் இளைஞர்களை மூளை, சலவை செய்து வருகிறது. இவர்களின் தமிழ் உணர்வுக்கு யாரும் ஆதரவு தெரிவிப்பதில்லை. எனினும், அந்த கட்சிக்கும் கொஞ்சம் ஓட்டு உள்ளது.

'டவுட்' தனபாலு: தி.மு.க.,வினரும், காங்கிரசாரும், நாம் தமிழர் என்ற கட்சி மீதும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் வெகுண்டு எழுகிறீர்களே... இதற்கு காரணம், உங்களுக்கு போட்டியாக உருவாகி வரும் கட்சி என்பதாலா அல்லது தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அது உருவாகி விடும் என்ற கோபத்தாலா என்ற, 'டவுட்' சீமான் கட்சியினருக்கு வந்திருக்கும்!


மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி
: பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி வாயிலாக கடந்த ஆண்டு, 3.61 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 35 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் தான். இப்படி கொள்ளையடித்து விட்டு, நாடு முழுதும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுகிறோம் என சொல்லி, பிரதமர் மோடி மக்களை ஏமாற்றுகிறார்.

'டவுட்' தனபாலு: இப்படி விதண்டாவாதம் பேசி தான், நாளுக்கு நாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் தேய்ந்து வருகின்றனர். பெரிய பொருளாதார மேதை போல பேசுவர். ஆனால், அதன் உள்ளர்த்தம், மத்திய - மாநில அரசுகளுக்கான எதிர்ப்பு மட்டும் தான். இனிமேலும், இவர்களது பேச்சை மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை!

புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி: எங்கள் வீட்டில் கொலு வைத்து வழிபாடு செய்தது, திராவிட கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆதி திராவிட காலனியில் இல்லாத வழக்கம், இந்திய பாரம்பரியமாக இருக்கக் கூடாதா... 100 சதவீத மக்கள் வைத்தால் தான் இந்திய பாரம்பரியமா... பொங்கல் துவங்கி ஓணம், தசரா, ராம நவமி, துர்கா பூஜை, கொலு, தீபாவளி என எல்லாமே 'இந்திய' பாரம்பரியம் தான்!

'டவுட்' தனபாலு: பிறருக்கு முன்னுதாரணமாக, கொலு வைத்து வழிபாடு நடத்தியதால், நீங்கள் சொல்லும் நபர்களுக்கு ஏற்பட்ட வயிற்றெரிச்சலின் வெளிப்பாடே இது. எல்லா பண்டிகைகளும் மக்கள் கொண்டாடத் தான். இதை இவர்கள் கொண்டாட வேண்டும்; இதை கொண்டாடக் கூடாது என்று இல்லை. அவரவர் வசதிக்கு இந்த பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். இதையும் அரசியல் ஆக்குகின்றனரே; இவர்கள் திருந்துவது எப்போதோ என்பது தான், 'டவுட்' ஆக உள்ளது!


தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:
விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சபேசன் என்பவர், சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்தி, அதன் வருவாயில், மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை இயக்க, முயற்சி செய்ததாக குற்றஞ் சாட்டியுள்ளது, தேசிய புலனாய்வு நிறுவனம். தி.மு.க., அரசு கவனத்துடன் இருக்க வேண்டியது கட்டாயம்.

'டவுட்' தனபாலு: தமிழகத்தில், விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசி வருவது தான் இதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்பதில், 'டவுட்'டே இல்லை. பல தலைவர்கள், தங்களுக்கு விடுதலை புலிகளுடன் உள்ள தொடர்பை பட்டவர்த்தனமாக தெரிவித்து பெருமைப்பட்டு கொள்கின்றனர். அது தான் அந்த இயக்கம் மீண்டும் துளிர்க்க காரணமாக இருக்கலாம்!


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. ஆணவ கொலைகள் நடந்து வருகின்றன. தி.மு.க.,வைச் சேர்ந்த கடலுார், திருநெல்வேலி எம்.பி.,க்கள் மீது நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதை கவர்னர் கண்காணிக்க வேண்டும் என்றும், அவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

'டவுட்' தனபாலு: தமிழகத்திற்கு புது கவர்னராக ரவி வருகிறார் என அறிவிக்கப்பட்டதும், அவரைக் கண்டு பயந்த சில கட்சித் தலைவர்கள், 'அவரை வாபஸ் பெற வேண்டும்' என கூக்குரல் எழுப்பினர். இதனால், அவர் ரொம்ப 'டெரராக' இருப்பாரோ என பல தலைவர்களும், 'டவுட்' கொண்டிருந்தனர். ஆனால், கவர்னர் ரவியின் செயல்பாடு, அப்படிஇல்லாமல், ரொம்ப அமைதியாக இருக்கிறதே!


தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளது. மாநிலம் முழுதும், இரு குழந்தைகள் உட்பட 331 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்; தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

'டவுட்' தனபாலு: ஆட்சிக்கு வந்ததும், கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தியது போல, டெங்கு காய்ச்சல் வரத் துவங்கியதுமே, தமிழக அரசு கட்டுப்படுத்தி விட்டதாக கூறுகிறீர்கள். எனவே, இதையே உங்கள் கட்சியினர், 'கொரோனா, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்திய ஆட்சி, எங்கள் ஆட்சி' என மார்தட்டிக் கொள்ள வாய்ப்பாக, இப்போதே சொல்லி வைக்கிறீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X