சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : அக் 13, 2021
Share
Advertisement
தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி அறிக்கை: பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்கும், அவர்கள் தங்கள் கனவை எட்டிப்பிடிப்பதற்கும் கல்வியே துணை நிற்கும். பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைத் தடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை அமைத்துக் கொடுப்போம்.பெண்களே இந்த நாட்டின் கண்கள். கண்ணை விற்று சித்திரம் வாங்கக் கூடாது. எனவே, பெண் கல்வி, பெண்களின் முன்னேற்றம் தான்

பேச்சு, பேட்டி, அறிக்கை

தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி அறிக்கை: பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்கும், அவர்கள் தங்கள் கனவை எட்டிப்பிடிப்பதற்கும் கல்வியே துணை நிற்கும். பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைத் தடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை அமைத்துக் கொடுப்போம்.பெண்களே இந்த நாட்டின் கண்கள். கண்ணை விற்று சித்திரம் வாங்கக் கூடாது. எனவே, பெண் கல்வி, பெண்களின் முன்னேற்றம் தான் இந்த நாட்டின் முன்னேற்றம் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது! தி.மு.க., ஆட்சி இதைச் செய்கிறதா என்பதைப் பார்ப்போம்!


தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
நெல்லை தி.மு.க., - எம்.பி., -அராஜகம், கடலுார் தி.மு.க., - எம்.பி., மீதான கொலை குற்றச்சாட்டு, சிதம்பரம் எம்.பி., திருமாவளவனின் ஜாதி குறித்த விமர்சனம் ஆகியவற்றை தமிழக ஊடகங்கள் விவாதம் நடத்தும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த கேள்விக்கு ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும்.பா.ஜ., - அ.தி.மு.க.,வுக்கு எதிரான விவகாரங்கள் என்றால், தமிழ் 'டிவி' ஊடகங்கள் வெகு ஆர்வமாக விவாதம் நடத்தி, செய்திகள் வெளியிட்டு மகிழ்ந்து கொள்கின்றன. ஆனால், ஆளும் தரப்புக்கு எதிரான விவகாரங்களில் அடக்கி வாசிப்பது கொஞ்ச காலமாகவே தொடர்கிறது. அதனால் தான் நம்பகத்தன்மையை இழந்துள்ளன!


தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு:
நாம் சம்பாதிக்கும் சொத்துக்களை நம் வாரிகளுக்கு ஒப்படைப்பது போல, தண்ணீரையும் பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கும் வழங்க வேண்டும்.தண்ணீர் மட்டுமின்றி அனைத்து இயற்கை வளங்களையும் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும். அதற்காக அனைவரும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்!


மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:
நெல் கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பது, கொள்முதல் செய்வதற்கு கமிஷன் வசூலிப்பது போன்ற தவறுகளை இழைக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடையூறு இன்றி விவசாயிகள் நெல் விற்பதற்கு வழி வகை செய்ய வேண்டும்.தமிழக விவசாயிகளுக்கு அடிப்படை தேவையாக இருக்கும் நெல் கொள்முதல் நிலையங்களையே சரிப்படுத்த முடியாத அரசு, டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்படுவது சரியா?


தமிழக பா.ஜ., கலாசார பிரிவு தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை:
ஆட்சிக்கு வந்ததும் 'டாஸ்மாக்'கை மூடுவோம் என பொய்யான வாக்குறுதியை தி.மு.க., தெரிவித்தது. 'நீட், நவோதயா வித்யாலயா' பள்ளிகளுக்கு எதிராக செயல்படும் தி.மு.க., அரசு, டாஸ்மாக்கை மூடுவது குறித்து ஒன்றும் சொல்லாமல் உள்ளது.தேர்தல் என்று வந்தால், ஓட்டுகளை பெறுவதற்காக, 'வானை வில்லாக வளைப்போம்; மேகத்தை கயிறாக திரிப்போம்' என சொல்லத் தான் செய்வர். ஓட்டு போடுபவர்கள் தான், அவ்வாறு செய்ய முடியுமா என யோசிக்க வேண்டும். வாக்குறுதிகளை நம்பி ஓட்டளிப்பவர்களுக்கு எப்போது தான் உண்மை புரியப் போகுதோ!தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை:
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியை இயக்கி வருபவருமான சோனியாவின் தலைமை, பொருளாதார ஆலோசகரை விட, டாக்சி ஓட்டுனர்கள் அதிக விபரமாக இருக்கின்றனரோ என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், அந்த அளவுக்கு அந்த ஆலோசகரின் அறிவுரைகள் உள்ளன.'அன்னையே...' என நாடு முழுதும் உள்ள காங்கிரசார் போற்றும் ஒரு தலைவியின் அரசியல் ஆலோசகரை, தரை 'ரேட்'டுக்கு மட்டம் தட்டி விட்டீர்களே!


பல கட்சிகளைக் கண்டு, இப்போது, தி.மு.க.,வில் சேர்ந்துள்ள இலக்கியவாதி நாஞ்சில் சம்பத் அறிக்கை:
தி.மு.க., வானை நோக்கி உயர்கிறது; அ.தி.மு.க., சசிகலா தலைமையை நோக்கி நகர்கிறது; பா.ஜ.,விற்கு பாடை தயாராகிறது. வாழ்க தமிழக உள்ளாட்சி வாக்காளர்கள்.ஆட்சிக்கு வந்து நான்கைந்து மாதங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில், ஆளுங் கட்சி இதை விட அதிகமாகத் தான் வெற்றி பெற வேண்டும். எனவே, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி இல்லை என்று தானே சொல்ல வேண்டும்!


தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை:
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என போதிக்கும் தமிழக பா.ஜ.,வுக்கு, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஓட்டு தான் கிடைத்துள்ளது!பா.ஜ.,வாவது ஒரு ஓட்டு பெற்றுள்ளது. நம்ம கட்சி அது தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிலைமையை யோசித்து பார்த்தீர்களா; ரொம்ப பரிதாபமாக அல்லவா இருக்கிறது!


தமிழக பா.ஜ., இளைஞர் அணி செயலர் வினோஜ் பி செல்வம் அறிக்கை
: எவ்வித கட்சி அடிப்படையும் இல்லாமல், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திக் என்பவரை, பா.ஜ., சார்பில் போட்டியிட்டார் என ஊடகங்களும், உடன் பிறப்புகளும் பொய் தகவலை பரப்பி வருகின்றனர்.இப்படி அரையும் குறையுமாக செய்தி பரப்புவதால் தானே, சமூக ஊடகங்களையும், 'டிவி' சேனல்களையும் மக்கள் நம்புவதில்லை!


தமிழக பா.ஜ., கலாசார பிரிவு தலைவர், நடிகர் காயத்ரி ரகுராம் அறிக்கை:
உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டனரோ, கட்சி சார்பாக போட்டியிட்டனரோ... ஆளும் அரசின் அதிகார பலம், பண பலத்தை எதிர்த்து போட்டியிடவே தைரியம் வேண்டும். ஒரு ஓட்டு வாங்கினாலும் பரவாயில்லை.சரியாக சொன்னீர்கள். அசுர பலத்துடன், தி.மு.க., ஆட்சியில் இருக்கும் போது, எதிர்த்து போட்டியிடவே தைரியம் வேண்டும் தான்!


தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலர் கே.சாமுவேல்ராஜ் அறிக்கை
: ஆணவ படுகொலைகள் தொடர்வதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மட்டுமல்ல, ஜாதி மறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் ஜாதி அமைப்புகளும், ஜாதிய சிந்தனையுடன் செயல்படும் கிராம அமைப்புகளும், ஒரு சில ஜாதி வெறியர்களுமே காரணமாக இருக்கின்றனர்.உண்மை தான். ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு ஜாதியினர் ஆதிக்க ஜாதிகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு சாமரம் வீசுகின்றன சில கட்சிகள். அதனால் தான் ஆணவ படுகொலைகள் நிகழ்கின்றன!

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X