'அரசுடன் பேசுவதாக ஜனாதிபதி வாக்குறுதி'

Updated : அக் 15, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (6+ 21)
Share
Advertisement
''லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை தொடர்பாக, மத்திய அரசுடன் உடனடி ஆலோசனை நடத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்,'' என பிரியங்கா கூறினார்.உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் சமீபத்தில் நடைபெற்ற கலவரத்தில், நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட மூன்று பேரை, போலீசார்
 'அரசு, ஜனாதிபதி , வாக்குறுதி'

''லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை தொடர்பாக, மத்திய அரசுடன் உடனடி ஆலோசனை நடத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்,'' என பிரியங்கா கூறினார்.

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் சமீபத்தில் நடைபெற்ற கலவரத்தில், நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்நிலையில், ராகுல் தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அந்தோணி, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா ஆகியோர், டில்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில், 'லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; இச்சம்பவம் குறித்து அரசியல் குறுக்கீடுகள் இன்றி விசாரணை நடத்த வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.

ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து ராகுல் கூறியதாவது:லக்கிம்பூரில் எட்டு பேர் உயிர் இழந்த கலவரம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா கைதாகி உள்ளார். இவரது தந்தை அஜய் மிஸ்ரா, மத்திய இணையமைச்சராக இருக்கிறார். இதனால் ஆஷிஷ் மீதான விசாரணை முறையாகவும், நியாயமாகவும் நடக்க வாய்ப்பில்லை. எனவே, இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிஉள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பிரியங்கா கூறியதாவது;விவசாயிகள் கொலையான விவகாரம் தொடர்பாக விசாரணை கோருவது, எங்கள் கட்சியோ, நானோ, தொண்டர்களோ அல்ல. இது மக்கள் மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்தினரின் கோரிக்கை. எனவே, மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். இவ்விஷயத்தில் எங்கள் கருத்துகளை, ஜனாதிபதியிடம் விரிவாக விளக்கி உள்ளோம். இதுகுறித்து மத்திய அரசிடம் உடனடியாக பேசுவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்து உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (6+ 21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-அக்-202121:15:24 IST Report Abuse
அப்புசாமி இவரோட வாக்குறுதியை நம்பலாம். அந்த பாஞ்சிலட்சம், ரெண்டு கோடி வேலைன்னு போக விட மாட்டாரு.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-அக்-202110:37:46 IST Report Abuse
Kasimani Baskaran "அரசியல் குறுக்கீடுகள் இன்றி விசாரணை நடத்த வேண்டும்" - அப்படியானால் காங்கிரசுக்கு மட்டும் குறுக்கிடும் சிறப்பு உரிமை உள்ளதா?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-அக்-202109:00:57 IST Report Abuse
RajanRajan பஞ்சாபில் போராட்டத்தில் வயதான 3 பெண்மணிகள் டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டனர்.. நீதி துறை கவனிக்குமா..?பிரியங்கா காந்தி க்கு துடைப்பம் கிடைக்குமா..? ராகுலுக்கு வெங்காயம் கொடுப்பாங்களா..? Press க்கு கவர் போகுமா..?
Rate this:
raja - Cotonou,பெனின்
14-அக்-202114:00:41 IST Report Abuse
raja(தரகனுவோ) விவசாயிகள்? அடித்து கொன்ற மீதி 5 பேருக்கு எப்படி போராட போறாங்க...அடிச்சே கொன்ன விவசாயியை கைது செய்ய சொல்வார்களா? இந்த துப்பு கெட்ட அயோக்கிய சிகாமணிகள்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X