பொது செய்தி

இந்தியா

நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், இந்தியாவின் கடன் அளவு நடப்பு ஆண்டில் ஜி.டி.பி.,யில் 90.6 சதவீதம் ஆக உயரக்கூடும் என ஐ.எம்.எப்., நிதி விவகாரத் துறை இயக்குநர் தெரிவித்தார். நடப்பு ஆண்டுக்கான நிதி கண்காணிப்பு அறிக்கையினை ஐ.எம்.எப்., வெளியிட்டது. அதில், “2020-ல் உலகளாவிய கடன் 226

புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், இந்தியாவின் கடன் அளவு நடப்பு ஆண்டில் ஜி.டி.பி.,யில் 90.6 சதவீதம் ஆக உயரக்கூடும் என ஐ.எம்.எப்., நிதி விவகாரத் துறை இயக்குநர் தெரிவித்தார்.



latest tamil news


நடப்பு ஆண்டுக்கான நிதி கண்காணிப்பு அறிக்கையினை ஐ.எம்.எப்., வெளியிட்டது. அதில்,
“2020-ல் உலகளாவிய கடன் 226 டிரில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்திற்கு உயர்ந்துள்ளது.
2019-ல் இது வெறும் 27 டிரில்லியன் டாலராக இருந்தது. இந்த கடன் எண்ணிக்கை அரசாங்கங்கள், குடும்பங்கள் மற்றும் நிதி சாரா நிறுவனங்களை உள்ளடக்கியது. இதுவரை பதிவான கடன் அளவுகளில் இதுவே மிகப்பெரியது. அதில் வளர்ந்த பொருளாதாரங்கள் மற்றும் சீனாவின் பங்கு 90 சதவீதத்திற்கு மேலாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மற்றும் குறைந்த வருவாய் நாடுகளின் கடன் அளவோ சுமார் 7 சதவீதம் மட்டுமே.” என குறிப்பிட்டுள்ளனர்.



latest tamil news




இது பற்றி ஐ.எம்.எப்., நிதி விவகாரத் துறை இயக்குநர் விட்டர் காஸ்பர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட கொள்கைகளால் கடன் அளவுகள் வேகமாக அதிகரித்து உச்சத்தை அடைந்துள்ளன. பொது மற்றும் தனியார் கடன்களின் உயர்வு நிதி ஸ்திரத்தன்மை மற்றும் பொது நிதி சார்ந்த அபாயங்களை ஏற்படுத்தக் கூடும். இந்தியாவின் கடன் 2016-ல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68.9 சதவீதத்தில் இருந்தது, 2020 ல் 89.6 சதவீதமாக அதிகரித்தது. 2021-ல் 90.6 சதவீதமாக உயரக்கூடும்.
2022-ல் இருந்து படிப்படியாக குறையும். என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
14-அக்-202103:21:53 IST Report Abuse
John Miller மோடியின் தாடி வளர்ந்தது மாறி இந்தியாவில் கடனும் வளர்ந்துவிட்டது.
Rate this:
Cancel
13-அக்-202121:23:11 IST Report Abuse
அப்புசாமி கடன் தானே... இன்னொரு 40, 50 லட்சம் கோடிக்கு ரூவா நோட்டு அச்சடிச்சு கடனை அடைச்சுடலாம். இதுக்கு முன்னாடி,மோடி ஐயா ஒரு ரூவா கூட சர்வதேச மார்க்கெட்டில் கடன் வாங்கலேன்னு ஜல்லியடிச்ச ரெட்டி ஐ.ஏ.எஸ் மற்றும் அதை வாட்சப்பில் பரப்பின சொம்புகளும் ஜோரா கை தட்டி வெளக்கேத்தவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X