அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் வெற்றி; மக்களுக்கு ஸ்டாலின் நன்றி

Updated : அக் 14, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (4+ 56)
Share
Advertisement
சென்னை:'கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது தி.மு.க., அரசு என்ற நம்பிக்கையுடன் ஓட்டளித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: ஒன்பது மாவட்டங்களில், தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றியைப் பெற்று வரும் செய்தி, ஐந்து மாத தி.மு.க., ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று. சாதனை சரித்திரம் தொடர்வதற்கு
உள்ளாட்சி, தேர்தல், வெற்றி,  மக்கள். ஸ்டாலின் நன்றி

சென்னை:'கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது தி.மு.க., அரசு என்ற நம்பிக்கையுடன் ஓட்டளித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: ஒன்பது மாவட்டங்களில், தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றியைப் பெற்று வரும் செய்தி, ஐந்து மாத தி.மு.க., ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று. சாதனை சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்ல, செய்த சாதனைகளுக்கான மக்களின் அங்கீகாரமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.

மிக கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும், கொடுத்த வாக்குறுதிகளில், 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டினோம்; நிறைவேற்றியும் வருகிறோம். நாள்தோறும் பல்வேறு திட்டங்களைத் துவங்கி வைத்து வருகிறோம். இந்த உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான் வெற்றி.நிற்க நேரமில்லை என்கிற அளவுக்கு நானும், அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் உழைத்தோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் தி.மு.க., அரசு நிறைவேற்றிக் காட்டி இருக்கிறது என, மக்கள் நினைக்கின்றனர்.

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது, தி.மு.க., அரசு என்ற நம்பிக்கையுடன் ஓட்டளித்த, தமிழக மக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


3வது பெரிய கட்சி பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:



தமிழகத்தில், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 47க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பா.ம.க., கைப்பற்றி உள்ளது. ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு, சுயேச்சை சின்னத்தில் நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் பா.ம.க.,வினர் வெற்றி பெற்று உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் தான் ஜனநாயகத்தின் அடித்தளம். அங்கு வலிமையான ஜனநாயகம் அமைந்தால், கிராமங்களும், மக்களும் முன்னேறுவர். அதனால் தான் பா.ம.க., தனித்து போட்டியிட்டது. பா.ம.க.,வின் வலிமையையும், களப் பணிகளையும் ஒப்பிடும்போது, பா.ம.க.,வுக்கு கிடைத்திருக்கும் வெற்றி போதுமானது அல்ல.

அதே சமயம் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், மக்களைச் சந்தித்து, அவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து, பா.ம.க., பெற்றுள்ள வெற்றி கவுரவமானது; மரியாதைக்குரியது.தனித்து போட்டியிட்ட போதிலும், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை, பா.ம.க., கைப்பற்றியதன் வாயிலாக, மூன்றாவது பெரிய அரசியல் சக்தி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4+ 56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
14-அக்-202115:05:35 IST Report Abuse
திரு.திருராம் நீங்கள் கொடுத்த வாக்குறுதியான இந்து மதத்தை அழிப்பது என்பதை நீங்கள் நிறைவேற்றிவருவதால் அவர்கள் போட்ட பிச்சை என்பதை தானே கூறியிருக்கிறீர்கள், இந்துக்களே நீங்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் உங்கள் கணிசமான ஓட்டு சிதறுகிறது, அவர்கள் நூறுபேர் இருந்தாலும் சொல்லி வைத்து (ஓட்டு)பிச்சை போடுகிறார்கள், அதுவும் போடுபவர்களிடம் ஒப்பந்தம் இட்டுவிட்டு போடுகிறார்கள், எனவே அவர்கள் வெற்றிக்கு காரணமான எண்ணிக்கை கொடுக்கும் அந்த 100பேருக்காக ஆட்சி செய்வார்களா அல்லது ஓட்டை சிதறடித்து வீணடித்துவிட்டு டாஸ்மாக்கில் மல்லாந்துகிடக்கும் அப் பிராணிகளுக்காக ஆட்சி நடத்துவார்களா?
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
14-அக்-202113:48:09 IST Report Abuse
Barakat Ali மருத்துவரே இப்போ மூன்றாவது பெரிய கச்சின்னு சொல்லுறியளே இதே தெனாவெட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இல்லாமே ஓடிப்போயிடுதே ? அப்போ மட்டும் ஏதாவது ஒரு கழகத்துடன் கையில துண்டு போட்டு மறைச்சிக்கிட்டு கூட்டணி பேரம் நடத்துறீங்களே? எந்த கட்சித் தலைவருக்கும் உங்களது படிப்புத் தகுதி இல்லை அதனால உங்களுக்கே இது நியாயமாப்பாடுதா ?
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
14-அக்-202113:44:29 IST Report Abuse
Barakat Ali "'கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது தி.மு.க., அரசு என்ற நம்பிக்கையுடன் ஓட்டளித்த" அழுகை வர்ற அளவுக்கு காமடி பண்ணுறதுன்னா இதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X