பொது செய்தி

தமிழ்நாடு

அதிக கட்டணம் வசூலா? ஆம்னி பஸ்கள் பறிமுதல்!

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை:''அதிக கட்டணம் வசூலித்தால், ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் , அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அவர் பேசியதாவது:ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாக்களை முன்னிட்டு, மக்கள் சொந்த
 அதிக கட்டணம் வசூலா? ஆம்னி பஸ்கள் பறிமுதல்!

சென்னை:''அதிக கட்டணம் வசூலித்தால், ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் , அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அவர் பேசியதாவது:

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாக்களை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, வரும் 20ம் தேதி வரை, மாநிலம் முழுதும் ஆம்னி பஸ்களுக்கான சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு, அபராதம் விதிக்க வேண்டும்.

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மற்றும் தமிழகத்திற்கு உரிய வரி செலுத்தாத ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்படும். இதுபோன்ற புகார்கள் குறித்து, 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X