அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜய் ரசிகர்கள் 110 பேர் வெற்றி

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 169 பேரில், 110 பேர் வெற்றி பெற்றதை, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக, பல நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தன. ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவித்த போது, விஜய் ரசிகர்கள் 169 பேர் களத்தில் இறங்கினர்.'தேர்தல் பிரசாரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ,

சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 169 பேரில், 110 பேர் வெற்றி பெற்றதை, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக, பல நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தன. ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவித்த போது, விஜய் ரசிகர்கள் 169 பேர் களத்தில் இறங்கினர்.'தேர்தல் பிரசாரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, விஜய் பெயர் மற்றும் படத்தையோ பயன்படுத்தக் கூடாது' என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

போட்டியிட்ட 169 பேரில், 110 பேர் வெற்றி பெற்றதாக, மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.'விஜயகாந்த் பாணியில் சினிமாவுக்கு வந்த விஜய், தற்போது அவரைப் போலவே, அரசியலிலும் வெற்றித் தடத்தை ஆரம்பித்துள்ளார்' என்றும், 'ஊரக உள்ளாட்சி தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக விஜய் மக்கள் இயக்கம் உருவெடுத்துள்ளது' என்றும், விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X