பொது செய்தி

தமிழ்நாடு

நவம்பர் ரேஷன் பொருள் இம்மாதம் கிடைக்குமா?

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை:தீபாவளி பண்டிகை நவ., 4ம் தேதி கொண்டாடப்படுவதால், ஏழை மக்கள் பயன் பெறும் வகையில், அடுத்த மாதம் வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை, இம்மாதமே வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. ஒரு மாதம் வாங்கவில்லை எனில்,

சென்னை:தீபாவளி பண்டிகை நவ., 4ம் தேதி கொண்டாடப்படுவதால், ஏழை மக்கள் பயன் பெறும் வகையில், அடுத்த மாதம் வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை, இம்மாதமே வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. ஒரு மாதம் வாங்கவில்லை எனில், அடுத்த மாதம் சேர்த்து வழங்கப்படாது.

ரேஷனில் வழங்கப்படும் பச்சரிசி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி, பல வீடுகளில் தீபாவளிக்கு இனிப்பு மற்றும் பலகாரம் செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுப்பது வழக்கம். அடுத்த மாதம் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது.அதற்காக, இம்மாத இறுதியில் இருந்தே பலரும் சொந்த ஊர் செல்ல தயாராகி வருகின்றனர்.

இதனால், தீபாவளிக்கு முந்தைய நாட்களில், பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படும். தற்போது, மளிகை பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.அவற்றின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ரேஷனில் அடுத்த மாதம் வழங்க வேண்டிய உணவு பொருட்களை, இம்மாதத்திற்கு உரிய பொருட்களுடன் சேர்த்து வழங்குமாறு அரசுக்கு கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எந்த மாற்றமும் இல்லை

கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை செயலர் நசிமுதீன் அறிவிப்பு:சமீப காலமாக சமூக வலைதளங்களில், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆண்டு வருமானம் ௧ லட்சம் ரூபாய்க்கு மேல் பெறுபவர்களுக்கும், ௫ ஏக்கருக்கு மேல் நிலம் வைத்து இருக்கும் விவசாயிகளுக்கும், மூன்று அறைகள் உள்ள, 'கான்கிரீட்' வீடுகளில் வசிப்பவர்களுக்கும், ரேஷன் அரிசி வழங்கப்படாது என, பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

பொது வினியோக திட்ட பலன்கள், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. அரிசி கார்டுதாரர்கள், இலவச அரிசி மற்றும் மானிய விலை பொருட்களை தொடர்ந்து பெறலாம்.சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X