பொது செய்தி

தமிழ்நாடு

'அடகு கடைக்காரர்களுக்கு நகை கடன் வழங்க கூடாது'

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை:'பான் புரோக்கர்' எனப்படும் நகை அடகு கடை நடத்துவோருக்கு, கூட்டுறவு நிறுவனங்களில் நகை கடன்கள் வழங்கக் கூடாது' என, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தங்க நகைகள் அடமானத்திற்கு, கிராமுக்கு 3,000 ரூபாய் வரை கடன் வழங்குகின்றன.ஒருவருக்கு அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய்

சென்னை:'பான் புரோக்கர்' எனப்படும் நகை அடகு கடை நடத்துவோருக்கு, கூட்டுறவு நிறுவனங்களில் நகை கடன்கள் வழங்கக் கூடாது' என, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தங்க நகைகள் அடமானத்திற்கு, கிராமுக்கு 3,000 ரூபாய் வரை கடன் வழங்குகின்றன.ஒருவருக்கு அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களை விட, கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த வட்டி வசூலிக்கப்படுகிறது.

மேலும், வட்டி மற்றும் அசல் சரியாக செலுத்தவில்லை என்றாலும், உடனே நகைகள் ஏலம் விடப்படுவதில்லை. இதனால், கூட்டுறவு நிறுவனங்களில் நகை கடன் வாங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

பல இடங்களில் அடகு கடை நடத்துவோர், கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த வட்டிக்கு நகை கடன் வாங்கி, அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதாக புகார்கள் எழுகின்றன. இதற்கு அதிகாரிகளும், கூட்டுறவு சங்க தலைவர்களாக உள்ள அரசியல் கட்சியினரும் உடந்தை.இந்த முறைகேடுகள், நகை கடன் தள்ளுபடி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இதையடுத்து, 'அடகு கடை நடத்துவோருக்கு, கூட்டுறவு நிறுவனங்களில் எக்காரணத்தை முன்னிட்டும் கடன்கள் வழங்கக் கூடாது; அவ்வாறு வழங்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சங்க செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X