பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 13, 2021
Share
Advertisement
அக்., 14, 1935புதுக்கோட்டையில் 1935அக்., 14ல் பிறந்தவர், பி.வெங்கட்ராமன். இவரின் தந்தை பரசுராமன் நடத்தி வந்த, 'கண்ணபிரான்' அச்சகம் வெகு பிரபலம். இவரின் அச்சுக் கூடத்தில், 'டிங்டாங்' உள்ளிட்ட பல்வேறு சிறுவர் இதழ்கள் அச்சாகி வெளிவந்தன. இந்த அச்சகத்திற்கு வரும் அகிலன், அழ.வள்ளியப்பா உள்ளிட்ட எழுத்தாளர்களுடன், வெங்கட்ராமனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் படைப்புகளை படித்து,
இதே நாளில் அன்று

அக்., 14, 1935புதுக்கோட்டையில் 1935அக்., 14ல் பிறந்தவர், பி.வெங்கட்ராமன். இவரின் தந்தை பரசுராமன் நடத்தி வந்த, 'கண்ணபிரான்' அச்சகம் வெகு பிரபலம். இவரின் அச்சுக் கூடத்தில், 'டிங்டாங்' உள்ளிட்ட பல்வேறு சிறுவர் இதழ்கள் அச்சாகி வெளிவந்தன. இந்த அச்சகத்திற்கு வரும் அகிலன், அழ.வள்ளியப்பா உள்ளிட்ட எழுத்தாளர்களுடன், வெங்கட்ராமனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் படைப்புகளை படித்து, எழுத்தாளராக வேண்டும் என ஆர்வம் கொண்டார்.'வடமலையழகன்' என்ற புனைப்பெயரில் கவிதை, கட்டுரைகள் எழுதினார். குழந்தை எழுத்தாளராக மாறியவர், 1954ல் 'டிங்டாங்' இதழுக்கு ஆசிரியராகவும், 'இலக்கியச் சாரல்' என்ற மாணவர் இதழுக்கு சிறப்பாசிரியராகவும் இருந்தார். எர்ணாகுளம் முத்தமிழ் சங்க செயலர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.பணி ஓய்வுக்கு பின், 'குழந்தை கவியுலகம்' என்ற அமைப்பை துவக்கினார். 'மனிதநேய செல்வர், சிறுவர் இலக்கிய வித்தகர்' உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.குழந்தை இலக்கிய எழுத்தாளர் பி.வெங்கட்ராமனின் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X