பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ்கள் பாணியில் விமான கட்டணமும் உயர்வு

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை:பண்டிகை கால தொடர் விடுமுறையை ஒட்டி, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவையும், பயணியர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதேநேரம், விமான டிக்கெட் விலை திடீர் உயர்வால் பயணியர் விரக்தி அடைந்துள்ளனர்.ஆயுத பூஜையை முன்னிட்டு, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதன் காரணமாக, சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில், பஸ்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.ரயில்,
 ஆம்னி பஸ்கள் பாணியில் விமான கட்டணமும் உயர்வு

சென்னை:பண்டிகை கால தொடர் விடுமுறையை ஒட்டி, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவையும், பயணியர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதேநேரம், விமான டிக்கெட் விலை திடீர் உயர்வால் பயணியர் விரக்தி அடைந்துள்ளனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதன் காரணமாக, சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில், பஸ்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.

ரயில், பஸ்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பயணியர், விமான பயணங்களை மேற்கொள்ள துவங்கி உள்ளனர். இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், தினசரி விமான சேவைகளின் எண்ணிக்கை, 190ல் இருந்து 213 ஆக உயர்ந்துள்ளது; பயணியர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.இதனால், உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணங்களும் திடீரென உயர்ந்துள்ளன.

சென்னையில் இருந்து துாத்துக்குடி செல்ல 4,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. நேற்று 7,500 ரூபாயாக உயர்ந்தது. நடப்பு ஆண்டு துவக்கத்தில், சென்னை - துாத்துக்குடி விமான கட்டணம் 3,500 ரூபாயாக இருந்தது. விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, மத்திய அரசு இரண்டு முறை கட்டண உயர்வுக்கு அனுமதித்ததால், 4,500 ரூபாயாக மாறியது.

இதேபோல, சென்னையில் இருந்து, மதுரை, திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு செல்வதற்கான கட்டணமும் அதிகரித்துள்ளது.'பண்டிகை காலங்களில், தனியார் ஆம்னி பஸ்கள் போல விமான நிறுவனங்களும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டன' என பயணியர் புலம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X