கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டாக்டர் கொலையில் துாக்கு உறுதி செய்ய கோரி மனு

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை:பிரபல டாக்டர் கொலை வழக்கில், ஏழு பேருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரிய மனு விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா, கூலி படையினரால் படுகொலை செய்யப்பட்டார். நிலப் பிரச்னை தொடர்பாக, 2013 செப்டம்பரில் இந்த படுகொலை நடந்தது.இவ்வழக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த,

சென்னை:பிரபல டாக்டர் கொலை வழக்கில், ஏழு பேருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரிய மனு விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா, கூலி படையினரால் படுகொலை செய்யப்பட்டார். நிலப் பிரச்னை தொடர்பாக, 2013 செப்டம்பரில் இந்த படுகொலை நடந்தது.

இவ்வழக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம் இவர்களின் மகன்கள் பாசில், போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையினர் என, 10 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது. பொன்னுசாமி, அவரது மகன்கள் பாசில், போரிஸ் மற்றும் டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், வில்லியம் உள்ளிட்ட ஏழு பேருக்கு துாக்கு தண்டனை விதித்தது. மேரி புஷ்பம், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன் ஆகியோருக்கு, ஆயுள் தண்டனை விதித்தது.

செஷன்ஸ் நீதிமன்றம், துாக்கு தண்டனை விதித்தால், அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். தண்டனையை உறுதி செய்ய, உயர் நீதிமன்றத்துக்கு ஆவணங்கள் அனுப்பப்படும். அதன்படி, செஷன்ஸ் நீதிமன்றம் அனுப்பிய வழக்கு ஆவணங்கள், உயர் நீதிமன்றத்துக்கு வந்தன.நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், மஞ்சுளா அமர்வில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையை, தசரா விடுமுறைக்கு பின் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X