பொது செய்தி

தமிழ்நாடு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அட்டவணை வெளியீடு

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை:பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் விரிவுரையாளர்கள் பணிக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வு, முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின், நீதிமன்ற உத்தரவின்படி, வரும் 28ம் தேதி முதல் 31 வரை, மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.இந்த தேர்வுக்கான பாட வாரியான அட்டவணை, ஆசிரியர் தேர்வு வாரிய

சென்னை:பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் விரிவுரையாளர்கள் பணிக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வு, முறைகேடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின், நீதிமன்ற உத்தரவின்படி, வரும் 28ம் தேதி முதல் 31 வரை, மீண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.இந்த தேர்வுக்கான பாட வாரியான அட்டவணை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' விரைவில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.


சிறப்பு ஆசிரியர் தேர்வு

இதற்கிடையில் அரசு பள்ளிகளில் இசை, ஓவியம், தையல் உள்ளிட்ட பணிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தேர்வு, 2017 செப்டம்பரில் நடந்தது. இதன் முடிவுகள், 2018 ஜூன் 14ல் வெளியாகின. இந்த தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டு, முடிவுக்கு வந்து உள்ளன.

இந்நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் புதிய பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 23 மற்றும்24ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X