அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னருடன் முதல்வர் சந்திப்பு ஏன்?

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என, அக்கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இதற்காக சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இணைந்து, ஒருமனதாக சட்ட மசோதாவை நிறைவேற்றி
 கவர்னருடன் முதல்வர் சந்திப்பு ஏன்?

சென்னை:தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என, அக்கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இதற்காக சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இணைந்து, ஒருமனதாக சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளன.இதற்கு பா.ஜ., மட்டும் ஆதரவு அளிக்கவில்லை. இந்த சட்ட மசோதா கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கவர்னர் இன்னும் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கவில்லை.இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, 45 நிமிடங்கள் வரை நீடித்தது. முதல்வருடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் சென்றனர்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என, அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதாவை, விரைவில் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும்படி, கவர்னரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தெரிகிறது.தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருவதாகவும், அதற்கு தீர்வு காணக் கோரியும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள், கவர்னரை சந்தித்து புகார் அளித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, தன் சந்திப்பின்போது, கவர்னரிடம் முதல்வர் எடுத்துரைத்ததாகவும் தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X