பாம்பை ஏவி மனைவியை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
கொல்லம்:கேரளாவில், பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொலை செய்த கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டது.கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூரஜ், 28. தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உத்ரா, 22. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.சூரஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பியதை அடுத்து, கணவன்

கொல்லம்:கேரளாவில், பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொலை செய்த கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூரஜ், 28. தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உத்ரா, 22. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.சூரஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பியதை அடுத்து, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச்சில், கணவர் சூரஜ் வீட்டிற்கு வெளியே உத்ராவை பாம்பு கடித்தது. உடனடி யாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிர் பிழைத்தார். அதன் பின் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம், உத்ரா தன் பெற்றோர் வீட்டு படுக்கையறையில் இறந்து கிடந்தார்.

டாக்டர்கள் பரிசோதித்ததில், உத்ரா பாம்பு கடித்து இறந்தது தெரியவந்தது. மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உத்ராவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சூரஜை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சூரஜ், வன விலங்கு ஆர்வலர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார். பாம்பு பிடிப்பவரின் உதவி யுடன் மனைவியை பாம்பு கடிக்க வைத்துள்ளார். முதல் முயற்சியில் உத்ரா பிழைத்துக் கொண்டார்.இதையடுத்து, சூரஜ் மற்றொரு விஷ பாம்பை 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி உத்ராவின் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். இரவு மனைவி தூங்கிக் கொண்டிருந்த போது பாம்பை கடிக்க வைத்துள்ளார். இதில் உத்ரா மரணமடைந்தது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கு, கொல்லம் ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த குற்றத்தை, 'அரிதிலும் அரிதான வழக்கு' என, குறிப்பிட்ட கொல்லம் நீதிமன்றம், சூரஜ் குற்றவாளி என, சமீபத்தில் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப் பட்டன. 'சூரஜுக்கு துாக்கு தண்டனை விதிக்க வேண்டும்' என, அரசு தரப்பில் கோரப்பட்டது. ஆனால் குற்றவாளியின் வயதை கருத்தில் வைத்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

'மனைவியை கொல்ல முதல் முறை முயற்சித்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், இரண்டாவது முயற்சியில் கொலை செய்ததற்கு மற்றொரு ஆயுள் தண்டனையும் விதிக்கப் படுகிறது.'மேலும், விஷம் வைத்த குற்றத்திற்காக 10 ஆண்டுகளும், ஆதாரங்களை அழித்ததற்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதில் 17 ஆண்டுகளை முதலில் அனுபவித்த பின், இரட்டை ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X