வெங்கையாவின் அருணாச்சல் பயணம் சீன வெளியுறவுத் துறை எதிர்ப்பு

Added : அக் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பீஜிங்:துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் வந்ததற்கு, சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.இந்தியா - சீனா ஆகிய நாடுகள் 3,488 கி.மீ., தொலைவுக்கான எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல்வேறு பகுதிகளில் எல்லையை பகிர்ந்து கொள்வதில் இரு நாடுகள் இடையே சர்ச்சை உள்ளது.எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம். நம் தலைவர்கள் மற்ற மாநிலங்களுக்கு

பீஜிங்:துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் வந்ததற்கு, சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இந்தியா - சீனா ஆகிய நாடுகள் 3,488 கி.மீ., தொலைவுக்கான எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல்வேறு பகுதிகளில் எல்லையை பகிர்ந்து கொள்வதில் இரு நாடுகள் இடையே சர்ச்சை உள்ளது.எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம். நம் தலைவர்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்வதைப் போலவே அருணாசல பிரதேசத்திற்கும் அடிக்கடி சென்று வருகின்றனர்.

அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படுகின்றன.ஆனால், அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என சீனா கோரி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அருணாச்சல பிரதேசத்திற்கு சமீபத்தில் சென்றார். அம்மாநில சட்ட சபையின் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.அப்போது, வட கிழக்கு மாநிலங்களுக்கு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த வளர்ச்சி பணிகள் தற்போது வேகம் எடுத்துள்ளதாகவும், இங்கு நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் கண்கூடாக தெரிவதாகவும் பேசினார்.

துணை ஜனாதிபதியின் இந்த வருகைக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லாவோ லிஜியான் கூறியதாவது:எல்லை விவகாரத்தில் சீன அரசின் நிலைப்பாடு தெளிவுடனும், உறுதியுடனும் உள்ளது. அருணாச்சல பிரதேசம் என்ற மாநிலத்தை இந்திய தரப்பு சட்டவிரோதமாகவும், ஒருதலைப்பட்சமாகவும் உரிமை கொண்டாடுவதை சீனா அங்கீகரிக்கவில்லை. அந்த பகுதிக்கு இந்திய தலைவர்கள் வருகை தருவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு நம் வெளியுறவுத் துறை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 'அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி' என, அது தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
canchi ravi - Hyderabad,இந்தியா
14-அக்-202118:19:50 IST Report Abuse
canchi ravi நம் நாட்டில் நம் துணை ஜனாதிபதி எங்கு வேண்டுமானாலும் செல்லுவார். நீ யார் ஆக்ஷேபிக்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X