பெண் ராணுவ அதிகாரி துாக்கிட்டு தற்கொலை

Added : அக் 13, 2021
Share
Advertisement
புனே:மஹாராஷ்டிராவில், பெண் ராணுவ அதிகாரி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்.,-காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புனே நகரில் ராணுவ புலனாய்வு பயிற்சி பள்ளி உள்ளது. அதில் பயிற்சி பெற, லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்துள்ள 43 வயதுள்ள

புனே:மஹாராஷ்டிராவில், பெண் ராணுவ அதிகாரி ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்.,-காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புனே நகரில் ராணுவ புலனாய்வு பயிற்சி பள்ளி உள்ளது. அதில் பயிற்சி பெற, லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்துள்ள 43 வயதுள்ள பெண் அதிகாரி வந்து தங்கியுள்ளார்.அவருக்கு, தேனீர் கொடுக்க உதவியாளர் சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண் ராணுவ அதிகாரி, துப்பட்டாவில் துாக்கு மாட்டி தொங்கியதைக் கண்டு உதவியாளர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து வந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அந்த பெண் அதிகாரி, விவாகரத்து உள்ளிட்ட குடும்பப் பிரச்னையால் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X