அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளைக் கைப்பற்றி தி.மு.க., சாதனை!

Updated : அக் 14, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை :ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை, ஆளும் தி.மு.க., அதிகளவில் கைப்பற்றியுள்ளது. மாவட்ட ஊராட்சிகளிலும் அக்கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. லோக்சபா, சட்டசபை தேர்தல்களை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று, அக்கட்சி சாதனை படைத்துள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம்,
ஒன்றிய கவுன்சிலர் பதவி, தி.மு.க., சாதனை

சென்னை :ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை, ஆளும் தி.மு.க., அதிகளவில் கைப்பற்றியுள்ளது. மாவட்ட ஊராட்சிகளிலும் அக்கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. லோக்சபா, சட்டசபை தேர்தல்களை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று, அக்கட்சி சாதனை படைத்துள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துஉள்ளது.


அறிவிப்புஇது மட்டுமின்றி, 28 மாவட்டங்களில் காலியாக இருந்த பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. இத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, நேற்று முன்தினம் காலை துவங்கியது. மொத்தம், 153 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், இரண்டு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 151 பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதில், நேற்று இரவு 7:00 மணி நிலவரப்படி, தி.மு.க., 94 இடங்களை கைப்பற்றியது; பல இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அ.தி.மு.க., ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்., ஏழு இடங்களிலும், மற்ற கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால், அனைத்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளை, தி.மு.க., கைப்பற்றுவது உறுதியாகிஉள்ளது. இதேபோல, 1,421 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில், ஐந்து பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஒரு இடத்தில் தேர்தல் நடக்கவில்லை. மீதமுள்ள 1,415 பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 829 இடங்களை தி.மு.க., கைப்பற்றியுள்ளது; பல இடங்களை பிடிக்கும் நிலையில் உள்ளது.


சாதனைதி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ., நான்கு; இந்திய கம்யூ., மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுயேச்சைகள் மற்றும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், 158 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., 186 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ., எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் நடந்தது.

மொத்தம் 3,007 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில், இதுவரை 2,609 பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தி.மு.க., ஆதரவு பெற்றவர்கள் தான், இதிலும் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல, 23 ஆயிரத்து 211 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில், இதுவரை, 16 ஆயிரத்து 906 பதவிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை, 38 மணி நேரத்தை கடந்து, தொடர்கிறது. இன்று வெற்றி நிலவரம் முழுதும் தெரிய வாய்ப்புள்ளது. லோக்சபா, சட்டசபை தேர்தலை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று, தி.மு.க., 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
14-அக்-202116:41:29 IST Report Abuse
vbs manian எடப்பாடி காலத்தில் வாய்க்காலில் ஏதோ கொஞ்சம் ஓரமாவது தண்ணீர் ஓடியது. இனிமேல் முற்றும் வறண்டு விடும். தமிழ் மக்கள் பொன்னுலகம் படைத்து விட்டார்கள்.
Rate this:
Cancel
Well Wiser - MADURAI,ஐக்கிய அரபு நாடுகள்
14-அக்-202115:05:49 IST Report Abuse
Well Wiser தினமலர் ஒருதலைப் பட்சம் இல்லாமல், ஒரு நேர்மையான செய்தியை வெளியிட்டுள்ளது. மீண்டும் 1971-ற்குத் திரும்பியுள்ளது.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
14-அக்-202115:03:16 IST Report Abuse
Vittalanand சாதனையில் வேதனையா வேதனையில் சாதனையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X