தடுப்பூசி போடாதவர்களுக்குரேஷன் கட்| Dinamalar

தடுப்பூசி போடாதவர்களுக்குரேஷன் 'கட்'

Added : அக் 13, 2021
Share
துமகூரு:"கொரோனா தடுப்பூசி பெறாதோருக்கு, ரேஷன் பொருட்கள் வழங்குவதை நிறுத்தும்படி, ஆலோசனை கூறப்பட்டுள்ளது," என, சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி தெரிவித்தார்.துமகூரில் அவர் கூறியதாவது:இதற்கு முன், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என, கூறி வந்தனர். இப்போது போதுமான அளவில் இருந்தாலும், தடுப்பூசி பெற மக்கள் முன் வருவதில்லை.கொரோனாவை கட்டுப் படுத்த வேண்டுமானால், அனைவரும்

துமகூரு:"கொரோனா தடுப்பூசி பெறாதோருக்கு, ரேஷன் பொருட்கள் வழங்குவதை நிறுத்தும்படி, ஆலோசனை கூறப்பட்டுள்ளது," என, சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி தெரிவித்தார்.துமகூரில் அவர் கூறியதாவது:

இதற்கு முன், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என, கூறி வந்தனர். இப்போது போதுமான அளவில் இருந்தாலும், தடுப்பூசி பெற மக்கள் முன் வருவதில்லை.கொரோனாவை கட்டுப் படுத்த வேண்டுமானால், அனைவரும் தடுப்பூசி பெறுவது கட்டாயம். எனவே தடுப்பூசி பெறாதோருக்கு, ரேஷன் பொருட்களை வழங்க வேண்டாம் என, ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.

துமகூரு மாவட்ட அளவிலாவது, இந்த விதிமுறையை கொண்டு வர வேண்டும். இது குறித்து மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுடன், ஆலோசனை நடத்தப்படும்.கொரோனா எப்போது வேண்டுமானாலும், அதிகரிக்கக்கூடும். இதை கட்டுப்படுத்த இப்போதிருந்தே, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தொந்தரவை அனுபவிக்க வேண்டி வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X