இடியும் நிலையில் இருந்த மூன்று மாடி கட்டடம் இடிப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரில் இடியும் நிலையில் இருந்த மூன்று மாடி கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர். அதில், வசித்து வந்த மூன்று குடும்பத்தினர் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூரு கமலா நகர் சங்கர்நாக் பஸ் நிறுத்தம் அருகில் ராஜேஸ்வரி, 55 என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டடம் உள்ளது.இதில், ஏழு குடும்பத்தினர் வசித்து வந்தனர். வீட்டு
இடியும் நிலையில் இருந்த மூன்று மாடி கட்டடம்  இடிப்பு

பெங்களூரு:பெங்களூரில் இடியும் நிலையில் இருந்த மூன்று மாடி கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர். அதில், வசித்து வந்த மூன்று குடும்பத்தினர் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு கமலா நகர் சங்கர்நாக் பஸ் நிறுத்தம் அருகில் ராஜேஸ்வரி, 55 என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டடம் உள்ளது.இதில், ஏழு குடும்பத்தினர் வசித்து வந்தனர். வீட்டு உரிமையாளர் ராஜேஸ்வரி வேறு இடத்தில் வசித்து வந்தார்.பெங்களூரில் பெய்து வரும் பலத்த மழையால் கட்டடத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த கட்டடத்தில் இருந்த நான்கு குடும்பத்தினர் வேறு வீட்டுக்கு இடம் பெயர்ந்தனர்.

மூன்று குடும்பத்தினர் மட்டும் இருந்தனர்.கடந்த ஒரு வாரமாக பெங்களூரில் பெய்து வரும் பலத்த மழைக்கு அடித்தளம் மேலும் அரிக்கப்பட்டு பலவீனமானது. எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இடிந்தால் அக்கம் பக்கத்து வீடுகளும் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது.இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகாரிகள் அங்கிருந்த குடியிருப்புவாசிகளை நேற்று வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்தனர்.

பின். அதிகாரிகள் ஜே.சி.பி., மூலம் கட்டடத்தை அக்கம் பக்கத்து வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இடித்தனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உணவு, அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது கட்டட உரிமையாளர் ராஜேஸ்வரி, எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.பெங்களூரில் சமீப காலமாக அடுக்குமாடி கட்டடங்கள் இடிவது தொடர்கதையாகி வருகிறது. எனவே, பலவீனமான கட்டடங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் பட்டியலிட்டு உள்ளனர். அதில், இந்த கட்டடமும் இடம்பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X