ஸ்டாண்டிங் கமிட்டி தேர்தல் வருமா?

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஸ்டாண்டிங் கமிட்டி தேர்தல் வருமா?முனிசி., யின் ஸ்டாண்டிங் கமிட்டி தலைவருக்கு தேர்தல் இன்னமும் நடத்தப்படவில்லை.மிக முக்கிய பொறுப்பான, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் இத்தலைவர் பதவிக்கு பலர் காத்திருக்காங்க.ஆனால் அதிகாரத்தில் இருக்கிறவங்களோட பவர் குறைஞ்சிடுமோன்னு அச்சப்படுறாங்களோ என்னவோ...ஸ்டாண்டிங் கமிட்டி தேர்தல் மேலும் தாமதம் ஏற்பட்டால் கை கட்சி

ஸ்டாண்டிங் கமிட்டி தேர்தல் வருமா?முனிசி., யின் ஸ்டாண்டிங் கமிட்டி தலைவருக்கு தேர்தல் இன்னமும் நடத்தப்படவில்லை.மிக முக்கிய பொறுப்பான, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் இத்தலைவர் பதவிக்கு பலர் காத்திருக்காங்க.ஆனால் அதிகாரத்தில் இருக்கிறவங்களோட பவர் குறைஞ்சிடுமோன்னு அச்சப்படுறாங்களோ என்னவோ...

ஸ்டாண்டிங் கமிட்டி தேர்தல் மேலும் தாமதம் ஏற்பட்டால் கை கட்சி உறுப்பினர்கள், சுயேச்சைகள் முனிசி.,க்கு எதிராக போர்க் கொடி துாக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாதுகாப்பை இழக்கும் சிட்டி!

சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையை கோல்டு சிட்டிக்கு அனுப்பி வெச்சாங்க. அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் ஒரு வருஷம் கூட இருக்க முடியாம வெளியேறிட்டாங்க.காவலர் வேலைக்காக பஞ்சாபிகள் தங்கி இருந்தாங்க. மைன்ஸ் குளோஸ் ஆனதும், அவர்கள் அனைவருமே சொந்த ஊருக்கே போயிட்டாங்க.ஊர்க்காவல் படை ஆபிசும், ரெண்டு போலீஸ் நிலையங்களும் மூடிட்டாங்க. ரிசர்வ் போலீஸ் படையை வெளியேத்தப்போறாங்க.கோல்டு சிட்டிக்கு பாதுகாப்பு தேவையே இல்லன்னு சொல்றாங்களோ.இந்த லட்சணத்தில மறுபடியும் கோல்டு எடுக்கும் மைன்ஸ் வேலையை எப்புடி தொடங்குவாங்க.ஊழியரை நியமிக்க வேணும்!மயானத்தில் குழிகளை தோண்டி, உடல்களை அடக்கம் செய்ய, முனிசி., ஊழியர்களை நியமிக்கணும். குழி தோண்டுவதற்கு நகராட்சியில் கட்டணம் நிர்ணயிக்க வேணும்னு பொதுமக்கள் நீண்ட நாளாக கோரி வர்ராங்க.ஊழியர்கள் இல்லாததாலும், கட்டணம் நிர்ணயிக்காததாலும், பல ஆயிரம் ரூபாயை பறிக்கிற வேலை நடக்குது.கொரோனா தொற்று பாதிப்பு நேரத்தில் அரசு கண்காணிப்பில் அடக்கம் செய்ததுபோல், இனிமேலும் முனிசி., பொறுப்பு ஏற்கனும். ஏற்கனவே அத்தொழிலில் இருப்பவர்களுக்கே அரசு வேலை வாய்ப்பு வழங்கணும்.ஏற்கனவே பிணங்களை அடக்கம் செய்வதில் நடந்த, பணம் பறிப்பு, முறைகேடுகள் தொடராமல் இருக்க வேணுமுன்னு நம்புறாங்களாம்!ஒன்றரை கோடி என்னாச்சு?தங்கம் விளைகிற முதல் தொழில் நகருக்காகவே நீர் மின் நிலையம் ஏற்படுத்தி கொண்டு வந்தாங்க. ஆனாலும், இன்னும் கூட ல வீடுகளுக்கு மின் இணைப்பு அனுமதி வழங்கப்படலயாம்.இது ஒரு பக்கம் இருக்கையில், நகரமெங்கும் மின்மாற்றி என்ற டிரான்ஸ்பார்மரை அமைச்சாங்க.ஒரு இடத்திலேயும், டிரான்ஸ்பார்மர்களை சுற்றி காம்பவுண்ட் ஏற்படுத்தல. இதனால் ஆபத்து ஏற்படும்னு பயம் ஏற்பட்டுள்ளது.மின்துறை பராமரிப்பு பணிக்காக வருஷத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் அரசு நிதி வழங்குதாம்.இந்த தொகை எதுக்கு பயன்படுத்துறாங்க; என்ன செலவு செய்ததாக கணக்கு காட்டுறாங்க.எல்லாமே மாய வித்தையாக இருக்குதுன்னு விபரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X