அரசு வேலைபல லட்சம் ரூபாய் மோசடி:| Dinamalar

அரசு வேலைபல லட்சம் ரூபாய் மோசடி:

Added : அக் 13, 2021
Share
பெங்களூரு:அரசு வேலை வாங்கி தருவதாக, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விக்டோரியா மருத்துவமனை குத்தகை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் குத்தகை ஊழியராக வேலை பார்த்து வருபவர் சந்தீப், 45. இவர் விதான் சவுதாவில் உயர் பதவியில் இருப்பதாகவும், சுகாதார துறையில் அரசு வேலை வாங்கி தருவதாகவும் பலரை நம்ப வைத்தார்.அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம்

பெங்களூரு:அரசு வேலை வாங்கி தருவதாக, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விக்டோரியா மருத்துவமனை குத்தகை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் குத்தகை ஊழியராக வேலை பார்த்து வருபவர் சந்தீப், 45. இவர் விதான் சவுதாவில் உயர் பதவியில் இருப்பதாகவும், சுகாதார துறையில் அரசு வேலை வாங்கி தருவதாகவும் பலரை நம்ப வைத்தார்.அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு, சுகாதார துறை கூடுதல் தலைமை செயலர் ஜாவேத் அக்தர் கையெழுத்தை போலியாக போட்டு, நியமன உத்தரவு கடிதத்தையும் கொடுத்துள்ளார்.

மேலும், பவுரிங் மருத்துவமனை ஊழியர்களுக்கு நிரந்தர வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி உள்ளார். இதை நம்பி, தப்ரிஜ் ஷெரிப் என்பவர் 6 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அவரிடம் பணத்தை வாங்கி கொண்டு மோசடி செய்துள்ளார்.இது குறித்து சுகாதார துறை இணை செயலர் சிரஞ்ஜீவி கொடுத்த புகாரின் படி, விதான் சவுதா போலீசார் சந்தீப்பை கைது செய்துள்ளனர். அவர், 20க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கலாம் என போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X