ஊடகங்களில் வெளிவரும் வீடியோ: சிவகுமார் மறுப்பு| Dinamalar

ஊடகங்களில் வெளிவரும் வீடியோ: சிவகுமார் மறுப்பு

Added : அக் 13, 2021
Share
பெங்களூரு,:''ஒழுங்கான கட்சி காங்கிரஸ். ஊடகங்களில் வெளிவரும் வீடியோவுக்கும் எனக்கும், காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த கமிஷனும் பெறவில்லை. அந்த அவசியமும் எனக்கு இல்லை,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் விளக்கம் அளித்தார்.மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கமிஷன் பெறுவது குறித்து, முன்னாள் எம்.பி., உக்ரப்பா, ஊடக ஒருங்கிணைப்பாளர் சலீம் ஆகியோர்
ஊடகங்களில் வெளிவரும் வீடியோ: சிவகுமார் மறுப்பு

பெங்களூரு,:''ஒழுங்கான கட்சி காங்கிரஸ். ஊடகங்களில் வெளிவரும் வீடியோவுக்கும் எனக்கும், காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த கமிஷனும் பெறவில்லை. அந்த அவசியமும் எனக்கு இல்லை,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் விளக்கம் அளித்தா

ர்.மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கமிஷன் பெறுவது குறித்து, முன்னாள் எம்.பி., உக்ரப்பா, ஊடக ஒருங்கிணைப்பாளர் சலீம் ஆகியோர் பேசியது ஊடகங்களில் வௌியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒழுக்கமான கட்சி காங்கிரஸ். ஊடகங்களில் வெளிவரும் வீடியோவுக்கும், எனக்கும், காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை.நான் எந்த கமிஷனும் பெறவில்லை. அத்தகைய விஷயத்தில் நான் ஈடுபடவில்லை. அந்த அவசியமும் எனக்கு இல்லை. இந்த வீடியோவால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டிருப்பது உண்மை.

இதற்கு முன், எடியூரப்பாவும், அனந்தகுமாரும் ரகசியமாக பேசிகொண்டிருந்த வீடியோ; பா.ஜ., அமைச்சர் படுக்கை அறை வீடியோ; பா.ஜ.,வின் விஸ்வநாத், பசனகவுடா பாட்டீல் எத்னால் ஆகியோர் பேசிய வீடியோக்களையும் ஊடகங்கள் வெளியிட்டன.

அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து உள்துறை அமைச்சர் சுயமாக வழக்கு பதிவு செய்து கொண்டு விசாரணை நடத்தலாம்.அரசியலில், கை தட்டுப்பவர்கள், செருப்பு வீசுவோர், ஆதரவு கோஷம் எழுப்புவோர், கற்கள் வீசுவோர், முட்டை வீசுவோர், எதிர் கோஷம் போடுவோர் என பல தரப்பினர் கட்சியினுள் இருப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X