குமாரசாமிக்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதிலடி

Added : அக் 13, 2021
Share
Advertisement
பெங்களூரு:''என் பிறந்த நாள் நிகழ்ச்சியில் சித்தராமையாவை சந்தித்தது தான். அதற்கு பின் அவரை சந்திக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை,'' என குமாரசாமிக்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதிலடி கொடுத்தார்.பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளர், அவரது மகன் விஜயேந்திராவின் ஆதரவாளர்கள் உட்பட பலர் மீது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கணக்கில்
குமாரசாமிக்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதிலடி

பெங்களூரு:''என் பிறந்த நாள் நிகழ்ச்சியில் சித்தராமையாவை சந்தித்தது தான். அதற்கு பின் அவரை சந்திக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை,'' என குமாரசாமிக்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதிலடி கொடுத்தார்.

பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளர், அவரது மகன் விஜயேந்திராவின் ஆதரவாளர்கள் உட்பட பலர் மீது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் காட்டப்படாத, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதற்கு, எடியூரப்பாவை, சித்தராமையா சந்தித்தது தான் முக்கிய காரணம் என்று, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்து, எடியூரப்பா வெளியிட்ட அறிக்கை:எனது பிறந்த நாள் நிகழ்ச்சியில், கடந்த, 2020, பிப்ரவரி, 27ல், சித்தராமையா என்னை சந்தித்தார். அதன் பின் சந்திக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை.மாநிலத்தில் பா.ஜ.,வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இலக்கை எட்டும் வகை ஓய்வு பெற மாட்டேன். நம்பிய கொள்கைக்கு விரோதமாக நடந்து கொண்டதில்லை. சமரசம் செய்து கொள்ளவும் மாட்டேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X