பொது செய்தி

இந்தியா

சிந்தகி,ஹனகல் தொகுதிகளுக்கு வரும் 30ல் இடைத்தேர்தல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
19 பேர் இறுதி களத்தில்!பெங்களூரு: விஜயபுராவின் சிந்தகி, ஹாவேரியின் ஹனகல் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. தாக்கலான மனுக்கள் திரும்ப பெறுவதற்கு கடைசி நாள் என்பதால், சிந்தகியில், இருவர்; ஹனகல்லில், நால்வரும் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர்.சிந்தகியில் 6 பேர்; ஹனகல்லியில் 13 பேரும் என இரு தொகுதிகளில் மொத்தம், 19 பேர் இறுதி
சிந்தகி,ஹனகல் தொகுதிகளுக்கு வரும் 30ல் இடைத்தேர்தல்

19 பேர் இறுதி களத்தில்!

பெங்களூரு: விஜயபுராவின் சிந்தகி, ஹாவேரியின் ஹனகல் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. தாக்கலான மனுக்கள் திரும்ப பெறுவதற்கு கடைசி நாள் என்பதால், சிந்தகியில், இருவர்; ஹனகல்லில், நால்வரும் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர்.சிந்தகியில் 6 பேர்; ஹனகல்லியில் 13 பேரும் என இரு தொகுதிகளில் மொத்தம், 19 பேர் இறுதி களத்தில் உள்ளனர்.

என் காலத்தில் இல்லை!

விஜயபுரா: முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறுகையில், ''யார் யார் காலத்தில் கமிஷன் பெற்றனர் என்பது குறித்து விவாதிக்க மாட்டேன். ஆனால், எனது காலத்தில் கமிஷன் விஷயமே இல்லை. யாரை வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள். மற்றவர்களின் ஊழல் குறித்து நான் ஏன் விமர்சிக்க வேண்டும்,'' என்றார்.

குதிரை வண்டியில் வருகை!

மைசூரு: கூட்டுறவு துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சோமசேகர், அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து, அரண்மனை வளாகத்தில் நடந்த தசரா விழாவில் பங்கேற்க, குதிரை வண்டியில் வந்தார். வழி நெடுகிலும் மக்களை பார்த்து கை சைத்து, தசரா வாழ்த்துக்கள் தெரிவித்தார். மக்களும் அமைச்சருக்கு பதில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ராய்ச்சூரை தெலங்கானாவுடன் சேருங்கள்

ராய்ச்சூர்: ''அபிவிருத்தி விஷயத்தில் ஆரம்பத்திலிருந்து ராய்ச்சூர் புறக்கணிக்கப்படுகிறது. வட மாவட்டங்களிலும், கல்யாண கர்நாடகா பகுதியில் எங்கள் மாவட்டம் சேர்க்கப்படவில்லை. எனவே ராய்ச்சூர் வேண்டாம் என்றால் தெலங்கானாவுடன் சேர்த்து விடுங்கள்,'' என்று பா.ஜ., எம்.எல்.ஏ., சிவராஜ் பாட்டீல், கால்நடை துறை அமைச்சர் பிரபு சவுஹானிடம் கூறினார். இந்த வீடியோ துணுக்கு சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிக்கு எம்.பி.பி.எஸ்., 'சீட்'

துமகூரு: எஸ்.எஸ்.எல்.சி., துணை தேர்வில், 625க்கு, 599 மதிப்பெண் பெற்று மங்களூரு ஆல்வாஸ் பள்ளி மாணவி கிரீஷ்மா என்ற மாணவி, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், மாணவியை நேரில் சந்தித்து, 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். பி.யூ.சி., முடித்த பின், தனது சித்தார்த் மருத்துவ கல்லுாரியில், இலவச எம்.பி.பி.எஸ்., 'சீட்' தருவதாக உறுதியளித்தார். கல்வி துறை முன்னாள் அமைச்சர் சுரேஷ்குமார், தனது மனைவியுடன் நேரில் சென்று மாணவியை வாழ்த்தினார்.

குட்டி யானை பலி

பெங்களூரு: பெங்களூரு பன்னர கன்னடா உயிரியல் பூங்காவில் ஸ்ரீராமுலு என்ற ஆறு வயது யானை குட்டி யானை திங்கட்கிழமை முதல் காணவில்லை. ஊழியர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், பன்னர கட்டா வனப்பகுதி எல்லையில் பாறைக்கு அடியில், நேற்று ஸ்ரீராமுலு மர்மான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.அதன் உடல் உப்பிய நிலையில் இருந்தது. இடது பக்க தந்தம் முறிந்திருந்தது. ஆனால் முறிந்த தந்தம் அதே இடத்தில் கிடந்தது. எனவே காட்டு யானை தாக்கியோ அல்லது சரிவில் வழுக்கி விழுந்தோ இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

உக்ரப்பாவுக்கு கண்டனம்

பெங்களூரு: மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் குறித்து உக்ரப்பா மற்றும் சலீம் பேசி பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். அப்போது அங்கிருந்த உக்ரப்பாவை பார்த்து உங்களை எம்.பி.,யாக்கியதே டி.கே சிவகுமார் தான். அவர் குறித்தே தவறாக பேசலாமா என்றனர்.நான் ஒன்றுமே பேசவில்லை என்றார் உக்ரப்பா. ஆனாலும் கோபம் தணியாத தொண்டர்கள் கண்டனம் எழுப்பினர். சிலர் எங்கே உக்கரப்பா செருப்பால் அடிக்க வேண்டும் என்றும், அவரை நெருப்பில் துாக்கி எறிய வேண்டும் என்றும் கோபத்தை வெளிப்படுத்தினர்.

கண்காட்சி துாதுவராக நடிகை

பெங்களூரு: பெங்களூரு அரண்மனை மைதானத்தில் அக்டோபர் 15 முதல் 18 வரை ஜுவல்ஸ் ஆப் இண்டியா சார்பில் நாட்டின் மிகப்பெரிய நகைகள் கண்காட்சி நடக்கிறது. இதன் துாதுவராக பிரபல நடிகை பிரியங்கா உபேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

17 வரை மழைக்கு வாய்ப்பு

மைசூரு: மைசூரு மாவட்டத்தில் சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவி வருகிறது. ஆங்காங்கே லேசானது முதல் சாதாரண மழை பெய்து வருகிறது. மேக மூட்டம் நிலவி வருவதால், 17 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நாகனஹள்ளி வேளாண் வானிலைஆய்வு மையம் அறிவித்துள்ளது.

6 பேருக்கு சிக்குன் குனியா

விஜயநகரா: விஜயநகரா ஹுவினஹடகலி அருகே உள்ள தும்பினகரே கிராமத்தில் ஆறு பேருக்கு சிக்குன் குனியாவும், இரண்டு பேருக்கு டெங்குவும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பித்யானா தாண்டாவில் எட்டு பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. இரண்டு கிராமங்களிலும் சுகாதார துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அலமாரியில் மறைத்து விபசாரம்

விஜயநகரா: விஜயநகரா ஹுவினஹடகலி நகரில் உள்ள லாட்ஜில் விபாசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அதில் விபசாரம் தொடர்பாக ஒரு பெண், மூன்று வாடிக்கையாளர்கள், ஏஜென்ட் உள்பட 9 பேரை கைது செய்தனர். போலீசார் வந்தால் மறைந்து கொள்ள, அலமாரியில் மறைவிடம் அமைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

பயங்கர ரவுடி நகரிலிருந்து வெளியேற்றம்

பெங்களூரு: பெங்களூரு சிவாஜிநகரின், பிரபல ரவுடி அமீர் கான், 36, மீது 22 கடுமையான வழக்குகள் பதிவாகியுள்ளன. எதிர்வரும் நாட்களில், இவரால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ரவுடி அமிர் கானை, அக்டோபர் 11 முதல், 2022 அக்டோபர் 10 வரை, பெங்களூரிலிருந்து வெளியேற்றி, கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X