பொது செய்தி

இந்தியா

12 வயது முதல், 17 வரையிலான குழந்தைகளுக்கு, கொரோனா தடுப்பூசி

Added : அக் 13, 2021
Share
Advertisement
பெங்களூரு:''கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த, விரைவில் நகரில், 12 வயது முதல், 17 வரையிலான குழந்தைகளுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்படும்,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்தார்.பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில், அவர் நேற்று கூறியதாவது:பெங்களூரு முதற்கட்டமாக, 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடப்படும். இதற்காக அனைத்து

பெங்களூரு:''கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த, விரைவில் நகரில், 12 வயது முதல், 17 வரையிலான குழந்தைகளுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்படும்,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்தார்.

பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில், அவர் நேற்று கூறியதாவது:பெங்களூரு முதற்கட்டமாக, 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடப்படும். இதற்காக அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தில், 12 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி பெறுவது கட்டாயம் என சட்டம் வகுக்கவில்லை. எனவே நாங்கள் யாரையும் பலவந்தப்படுத்த முடியாது. பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். தொண்டு அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போடப்படும்.புதிதாக தடுப்பூசி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, பெங்களூரில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை, ஆய்வு செய்கிறோம். தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாமல, பார்த்துக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X