அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு ஏன்?

Updated : அக் 15, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (13+ 35)
Share
Advertisement
சென்னை :தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என, அக்கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இதற்காக சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இணைந்து, ஒருமனதாக சட்ட மசோதாவை
கவர்னர், ரவி, முதல்வர், ஸ்டாலின், சந்திப்பு

சென்னை :தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என, அக்கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இதற்காக சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இணைந்து, ஒருமனதாக சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளன.இதற்கு பா.ஜ., மட்டும் ஆதரவு அளிக்கவில்லை. இந்த சட்ட மசோதா கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கவர்னர் இன்னும் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கவில்லை.

இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, 45 நிமிடங்கள் வரை நீடித்தது. முதல்வருடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் சென்றனர்.இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என, அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதாவை, விரைவில் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும்படி, கவர்னரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருவதாகவும், அதற்கு தீர்வு காணக் கோரியும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள், நேற்று முன்தினம் கவர்னரை சந்தித்து புகார் அளித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, தன் சந்திப்பின்போது, கவர்னரிடம் முதல்வர் எடுத்துரைத்ததாகவும் தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (13+ 35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
14-அக்-202112:01:56 IST Report Abuse
raja அப்போ சட்டம் ஒழுங்கு சரியில்லை உண்மைதான்... அதை சரிப்படுத்த விடியல் முதல்வர் என்ன செஞ்சிகிட்டு இருக்காருன்ன சொல்ல போயி இருக்காரு.. சொல்றீங்க....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
14-அக்-202109:26:57 IST Report Abuse
duruvasar ஜல்ஜீவன் திட்டத்தில் மாநில அரசு அளிக்கவேண்டிய 50% பங்களிப்பிலிருந்து விலக்கு, வீட்டுக்கு விலக்கு, ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கிலிருந்து விலக்கு, பதிய கல்வி கொள்கையிலிருந்து விலக்கு என இப்படி விலக்கு கேட்டு தமிழர்கள் எல்லாவற்றிலுமிருந்து விலக்கி வைக்கபட வழிவகுக்கிறார்கள். இப்பொழுதே கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்மாநிலங்களைவிட நிறைய விஷயங்களில் தமிழ்நாடு பின்தங்கியிருக்கிறது. முதல் மாநிலம், சிறந்த முதல்வர் என தனக்குத்தானே கீரிடம் வைத்துக் கொள்வதை விடுத்து கள உண்மையை உணருங்கள். சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் அளவுக்கு அதிகமாக நடுநிலைமை கடைபிடிக்கிறார்கள். என்ன செய்ய.
Rate this:
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
14-அக்-202111:56:36 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன்விவசாயிகள் பேரணியில் ஜீப்..பை விட்டு விபத்து ஏற்படுத்துவது போன்ற நிறைய கெட்ட விஷயங்களில்... தமிழகம் பின்தங்கித்தான் இருக்கிறது... “பின்தங்கி” இருப்பதால்தான்... தினமும் ஆயிரக்கணக்கான கூலிகள்... பொழப்பு தேடி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள்... குழந்தைகள் பாலியல், பெண்கள் பாலியல், விவசாயிகளை துன்புறுத்துவது, போன்றவற்றில் தமிழ்நாடு எப்பவுமே பின்தங்கித்தான் இருக்குது...?...
Rate this:
இரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்
14-அக்-202113:32:05 IST Report Abuse
இரா. பாலாதொழிற்சாலையில் வேலை பார்த்தவரை போட்டுத்தள்ளியது இதே தமிழக திமுக அரசியல்வாதி தான். கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாய் இருப்பதும் திமுக அரசியல்வாதிதான். ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திராகுமரியும் திமுகதான். ஆயிரக்கணக்கானோர் தமிழகத்திலிருந்து மும்பை செல்வதும் நடக்கிறது. நேற்றுவரை எண்பத்தியாறு கூட்டல் ஒன்பது தொண்ணூற்றி ஏழு என்று சொன்னவரை இன்று உலகிலேயே அதி மேதாவி என பொய்யாய் புகழ்வதும் தமிழ்கத்தில்தான் நடக்கின்றது. தமிழக தொடக்கக் கல்வியின் தரன் உத்திரப்பிரதேசத்தைவிட கீழே இருப்பது தெரியுமா? தமிழகம் எந்தெந்த விசயங்களில் பிந்தங்கியிருக்கிறது என்பதை உணர்வது நல்லது....
Rate this:
Ravi - Madurai,இந்தியா
14-அக்-202113:34:24 IST Report Abuse
Raviவல்லவரையன், உனக்கு பொய்ச்சொல்ல வெட்கமா இல்லையா? பொய்ச்சொல்வது, ஏமாற்றுவது, கபடநாடகமாடுவது, ஏமாற்றி பிறர் பொருளையும் சொத்துக்களையும் அபகரிப்பது, பித்தலாட்டம் செய்வது, பெண்களிடம் தவறாக நடந்துகொள்வது, அநாகரீகமத நடுரோட்டிகளிலெல்லாம் அலறுவது, பிறரை பற்றி அவதூறுப்பரப்புவது, அணைத்து கொடிய செயல்களையும் செய்வதில்தான் திமுக திறமைசாலிகள் அவர்களுக்கு அவர்களே நிகர். இவர்களை அழிக்க மற்றொரு ராஜபக்ஷ நம்நாட்டிருக்கும் பிரதமராக வரவேண்டும்....
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
14-அக்-202115:00:18 IST Report Abuse
Shekarஅவனாவது வேலைக்கு வர்றான், நம்ம ஆளுக ஆயிரக்கணக்கில் திருட்டு மரம் வெட்ட போயி சாகுறான்...
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
14-அக்-202115:05:22 IST Report Abuse
Shekarமான்சோலை விவசாய தொழிலாளர்களை நடத்திய விதம் உலகறியும்...
Rate this:
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
15-அக்-202118:14:47 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன்கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோதும்... காவேரி, தாமிரபரணி, வைகை ஆகிய எந்த ஒரு தமிழ்நாட்டின் நதிகளில் கொத்து கொத்தா பொணங்கள் மிதக்கல... இரண்டு) இங்க... குழந்தைகளை பாலியல் வன்முறை நடக்கல... நடந்தாலும், கோவையில் ஓடவிட்டு என்கவுண்டர் பண்ண மாதிரி பண்ணிடுவாங்க... மூன்று) எப்பவுமே அமைதியான மாநிலமாக தமிழ்நாடும்... அமைதியானவர்களாக தமிழ்நாடு வாழ் மக்களும் இருக்காங்க......
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
19-அக்-202111:10:42 IST Report Abuse
கௌடில்யன்தினமும் ஆயிரக்கணக்கான கூலிகள்... பொழப்பு தேடி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.. நம்மாளுங்க டாஸ்மாக் வாசலில் ......
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-அக்-202108:02:38 IST Report Abuse
RajanRajan வெட்டி வேலை நித்திரைக்கு கேடு. என்னமா உழைக்கிறானுங்கப்பா கல்வி வியாபாரிங்களுக்காக. அதுக்காக மாணவர்களி திறன் மிக்க எதிர்காலத்தை ஒழிக்க தயாராகிட்டன் திராவிடன். ஆயிரம் பேரை கொல்லும் அரை வைத்தியனை உருவாக்க முயலும் திமுக திருட்டு வித்தைகள். உசார் மாணவர்களே போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X