விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
பெங்களூரு:விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் உறவினரின் பையில், இரண்டு வெடிக்காத துப்பாக்கி குண்டுகள் இருந்தது வீரர்கள் சோதனையில் சிக்கியது.பெங்களூரு சாந்தி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் உறவினரான பாருக் நெலப்பாட், துபாய் செல்வதற்காக நேற்று காலை 9:30 மணிக்கு கெம்பே கவுடா விமான நிலையம் சென்றார்.அங்கு அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது ஒரு பையில்

பெங்களூரு:விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் உறவினரின் பையில், இரண்டு வெடிக்காத துப்பாக்கி குண்டுகள் இருந்தது வீரர்கள் சோதனையில் சிக்கியது.

பெங்களூரு சாந்தி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் உறவினரான பாருக் நெலப்பாட், துபாய் செல்வதற்காக நேற்று காலை 9:30 மணிக்கு கெம்பே கவுடா விமான நிலையம் சென்றார்.அங்கு அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது ஒரு பையில் வெடிக்காத இரண்டு துப்பாக்கி குண்டுகள் இருந்தன.உடனடியாக பாதுகாப்பு படை மற்றும் சி.ஐ.எஸ்.எப்., படையினருக்கு விமான நிலைய சோதனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் பரூக் நெலப்பாடுவிடம் விசாரித்தனர். அவர், "நான் பையில் எப்போதும் என் உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் குண்டுகளை வைத்திருப்பேன். அவசரத்தில் குண்டுகளை எடுத்து வைக்க மறந்து விட்டேன்,” என விளக்கமளித்தார்.

மேலும் தன்னிடம் இருந்த துப்பாக்கிக்கான உரிமத்தை காட்டினார். அதை பரிசீலனை செய்த அதிகாரிகள், அவரின் பேச்சில் உண்மை இருப்பதை அறிந்து விமானத்தில் பயணிக்க அனுமதி அளித்தனர். இரண்டு துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X