கல்குவாரியில் சட்டவிரோத குப்பை:விவசாயிகள் காவல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோலார்:கல்குவாரியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டுவதை தடுக்கும் நோக்கில், விவசாயிகள் இரவு, பகலாக காவல் காக்கின்றனர்.கோலாரின், லட்சுமிசாகரா ஏரி அருகில், கல்குவாரி உள்ளது. இங்கு கோலார் நகராட்சி, ஹொஸ்கோட் நகராட்சிகள், குப்பையை கொட்டுகின்றன. இந்த ஏரிக்கு கே.சி., வேலி தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. குப்பை கொட்டுவதால், தண்ணீர் அசுத்தமடைகிறது.கல்குவாரியில் குப்பை கொட்டக்கூடாது

கோலார்:கல்குவாரியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டுவதை தடுக்கும் நோக்கில், விவசாயிகள் இரவு, பகலாக காவல் காக்கின்றனர்.

கோலாரின், லட்சுமிசாகரா ஏரி அருகில், கல்குவாரி உள்ளது. இங்கு கோலார் நகராட்சி, ஹொஸ்கோட் நகராட்சிகள், குப்பையை கொட்டுகின்றன. இந்த ஏரிக்கு கே.சி., வேலி தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. குப்பை கொட்டுவதால், தண்ணீர் அசுத்தமடைகிறது.கல்குவாரியில் குப்பை கொட்டக்கூடாது என, நகராட்சிகளுக்கு உத்தரவிட கோரி, பசுமை தீர்ப்பாயத்தில், விவசாய சங்கத்தினர் முறையிட்டுள்ளனர்.

விசாரணை நடத்திய தீர்ப்பாயமும், குப்பை கொட்டக்கூடாது என, உத்தரவிட்டது. ஆனால் கோலார், ஹொஸ்கோட் நகராட்சிகள், இந்த உத்தரவை பொருட்படுத்தவில்லை. தினமும் குப்பையை கொட்டுகின்றன.இதை கண்டித்து, விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமின்றி, கல்குவாரியில் குப்பை கொட்டாமல், கூடாரம் போட்டு இரவு, பகலாக விவசாயிகள் காவல் காக்கின்றனர்.

விவசாய சங்கத்தலைவர் நாராயணசாமி கூறியதாவது:கோலாரின் லட்சுமி சாகரா கிராமத்தில், கே.சி., வேலி தண்ணீர் பாயும் ஏரி அருகில் உள்ள, கல்குவாரி 150 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்டுள்ளது. இங்கு கோலார், ஹொஸ்கோட் நகராட்சிகளின் ஊழியர்கள், சட்டவிரோதமாக குப்பையை கொட்டுகின்றனர். மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுகிறது.இதனால் நிலத்தடி நீர் அசுத்தமடைந்துள்ளது.

சுற்றுச்சூழலும் மாசடைகிறது. கல்குவாரியில் குப்பை கொட்ட, பசுமை தீர்ப்பாயம், தடை விதித்துள்ளது. கல்குவாரி நுழை வாசலில், டெண்ட் போட்டு தங்கி, போராட்டம் நடத்துகிறோம். குப்பை கொட்டாமல் கண்காணிக்கிறோம்.கே.சி., வேலி தண்ணீர், லட்சுமிசாகரா ஏரிக்கு வந்தடைகிறது. இங்கிருந்துதான், மாவட்டத்தின் மற்ற ஏரிகளுக்கு, தண்ணீர் பாய்கிறது. இவைகளும் அசுத்தமடையும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X