அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வெறும் ரெண்டே ரெண்டு' தொகுதி உள்ளாட்சிகளில் மாயமான மய்யம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை:நடிகர் கமலின் தீவிர பிரசாரம் எடுபடாததால், ஊரக உள்ளாட்சி தேர்தலில், அவரின் மக்கள் நீதி மய்யம் கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளும் தோல்வியை சந்தித்துஉள்ளன. அதில், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் அடங்கும். பெரும்பாலான இடங்களில் வேட்பாளர்கள் டிபாசிட் தொகையை

சென்னை:நடிகர் கமலின் தீவிர பிரசாரம் எடுபடாததால், ஊரக உள்ளாட்சி தேர்தலில், அவரின் மக்கள் நீதி மய்யம் கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளும் தோல்வியை சந்தித்துஉள்ளன. அதில், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் அடங்கும். பெரும்பாலான இடங்களில் வேட்பாளர்கள் டிபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

சட்டசபை தேர்தலில், கிராமப்புறங்களில் கட்சி வளரவே இல்லை என்பதை உணர்ந்த கமல், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பலத்தை அறிய விரும்பினார்.அதனால் கூட்டணி அமைக்காமல், தனித்து களம் இறங்கினார். 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தினார். அதில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. அதேநேரத்தில், ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில், தென்காசி மாவட்டம், குவளைக்கன்னி பஞ்சாயத்து, சிவலிங்கபுரம் கிராமம், முதலாவது வார்டில் குமாரும், காஞ்சி தென்கிழக்கு மாவட்டம், பழவேலி கிராம ஊராட்சி, நான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அனிதா பாபுவும் வெற்றி பெற்றுள்ளனர்.

மற்றவர்கள் பலர், டிபாசிட் இழந்துள்ளனர்.சினிமாவில் உச்ச நட்சத்திரமாக, உலக நாயகனாக வலம் வந்த கமல், அரசியலில் களமிறங்கி எதையும் சாதிக்க முடியவில்லை. சட்டசபை தேர்தலில், எம்.எல்.ஏ.,வாக கூட வெற்றி பெற முடியவில்லை. உள்ளாட்சி தேர்தலிலும் ஒரு பஞ்சாயத்தை கூட பிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் கமல் நேரடியாக பிரசாரம் செய்தார்.

பிரசார களத்தை விட, 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளத்தையே கமல் நம்பியிருப்பது, அவரது கட்சிக்கு தொடர் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதேநேரத்தில், பெயர், அமைப்பு என, எதையும் வெளிப்படுத்தாமல், 110 இடங்களில், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் குறித்து, மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ், 'டுவிட்டர்' பதிவில், 'நடந்தது ஒரு தேர்தல்; இதற்கோர் ஓட்டு எண்ணிக்கை; வெற்றி பட்டியல்.'பேசாமல், ஆள்பவர்களே ஆட்களை நியமித்து விட்டு போயிருக்கலாம்; அரசு பணம் மிச்சம்' என, எரிச்சலை காட்டியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X