பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி முகவர்களுக்கு அரசு எச்சரிக்கை

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை:'அரசு உதவித்தொகை வழங்க, பயனாளிகளிடம் வங்கி முகவர்கள் பணம் பெறக் கூடாது' என அரசு எச்சரித்துள்ளது.முதியோர், மாற்றுத்திறனாளி, விதவையர், விவசாய தொழிலாளர், ஏழை விவசாயி, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், 50 வயதை கடந்தும் திருமணமாகாத ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் அரசால், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. வங்கி முகவர்கள், 'பயோமெட்ரிக்' இயந்திரம் வாயிலாக, இந்த பணத்தை வழங்குகின்றனர்.

சென்னை:'அரசு உதவித்தொகை வழங்க, பயனாளிகளிடம் வங்கி முகவர்கள் பணம் பெறக் கூடாது' என அரசு எச்சரித்துள்ளது.

முதியோர், மாற்றுத்திறனாளி, விதவையர், விவசாய தொழிலாளர், ஏழை விவசாயி, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், 50 வயதை கடந்தும் திருமணமாகாத ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் அரசால், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. வங்கி முகவர்கள், 'பயோமெட்ரிக்' இயந்திரம் வாயிலாக, இந்த பணத்தை வழங்குகின்றனர்.

இந்த உதவித்தொகையை பயனாளிகளுக்கு வழங்க, வங்கி முகவர்கள் பணம் பெறுவதாக புகார் வந்துள்ளது. பயனாளிகளிடம் பணம் பெறக் கூடாது என, அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அரசு ஓய்வூதியம் பெறும் பயனாளிகள், வங்கி முகவர்களுக்கு பணம் வழங்க தேவையில்லை. அவ்வாறு வங்கி முகவர்கள் வற்புறுத்தும் பட்சத்தில், வங்கி மேலாளர்களிடமும், வருவாய் நிர்வாக ஆணையரகத்தின், 1800 - 425 1090 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் புகார் செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X