அமித் ஷா தலைமையில் பா.ஜ., வார் ரூம் கூட்டம்| Dinamalar

அமித் ஷா தலைமையில் பா.ஜ., 'வார் ரூம்' கூட்டம்

Added : அக் 13, 2021
Share
புதுடில்லி:அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்க, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், பா.ஜ., 'வார் ரூம்' கூட்டம் டில்லியில் நடைபெற்றது.பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளன. வெற்றிஇதில், பஞ்சாபை தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 'இதில்,

புதுடில்லி:அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்க, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், பா.ஜ., 'வார் ரூம்' கூட்டம் டில்லியில் நடைபெற்றது.
பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளன.


வெற்றி

இதில், பஞ்சாபை தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 'இதில், மூன்று மாநிலங்களில் சிரமம் இன்றி பா.ஜ., வெற்றி பெற்றுவிடும்' என, அக்கட்சி நம்பிக்கையுடன் உள்ளது. உ.பி.,யில் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நேரத்தில் லக்கிம்பூர் வன்முறை சம்பவம், பா.ஜ., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யை சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர்கள் சிலர், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை டில்லியில் சமீபத்தில் சந்தித்தனர். நான்கு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


பிரசாரம்

உ.பி.,யில் 100 நாட்களில் 100 நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது. பல்வேறு சமூக மக்களை கவர, பொது கூட்டங்கள், வீடு வீடாக சென்று பிரசாரம், இளைஞர் மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.இந்நிலையில், முக்கிய கட்சி விவகாரங்கள் குறித்து விவாதித்து உடனுக்குடன் முடிவெடுக்க, டில்லியில் பா.ஜ.,வுக்கு 'வார் ரூம்' எனப்படும் அவசர கட்டளை அலுவலகம் உள்ளது.

இங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்து முக்கிய விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X