கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உணவு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய அறிவுரை

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை:உணவு பொருட்களின் தரத்தை, அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு: வெள்ளை நிறத்தில் 'பளிச்'சென தெரிவதற்காக, ஜவ்வரிசி தயாரிக்கும்போது, ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. கலப்பட ஜவ்வரிசியால், உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து தொடரப்பட்ட

சென்னை:உணவு பொருட்களின் தரத்தை, அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு: வெள்ளை நிறத்தில் 'பளிச்'சென தெரிவதற்காக, ஜவ்வரிசி தயாரிக்கும்போது, ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. கலப்பட ஜவ்வரிசியால், உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ரசாயன கலப்பை தடுக்க உத்தரவிட்டது.

ஈரப்பதமான மரவள்ளிக் கிழங்கு மாவை தயாரிக்க அனுமதி வழங்கி, 2016ல் உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்திருந்தும், அதை மீறும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு வந்தது. வெவ்வேறு கடைகளில் வாங்கப்பட்ட மூன்று மாதிரி ஜவ்வரிசியை, உணவு பாதுகாப்புத் துறை உதவியாளரிடம் வழங்கி, கிண்டியில் உள்ள பரிசோதனை கூடத்தில் சோதிக்கும்படி, நீதிபதி கூறினார். இதையடுத்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இரண்டு மாதிரிகள், நிர்ணயிக்கப்பட்ட தரத்துக்கு உட்பட்டு இருப்பதாகவும், ஒரு மாதிரி மட்டும் சிறிய அளவில் வேறுபாடு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையை பரிசீலித்த பின், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: ஈரப்பதமான ஜவ்வரிசியில் ரசாயனம் சேர்க்கப்பட்டு, சந்தையில் விற்கப்படுவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு சட்டவிரோதமாக விற்பனை நடந்தால், அதுகுறித்து மனுதாரர் புகார் அளிக்க வேண்டும்.இந்த விஷயத்தில், ஒட்டுமொத்த விசாரணை நடத்த உத்தரவிட முடியாது. அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிகளுக்கு உட்பட்டு உணவுப் பொருள் இல்லை என்றால், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். எனவே, குறிப்பிட்டு புகார் தெரிவிக்கப்பட்டால், அதிகாரிகளால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X