கோவில் நிலத்தை மீட்க தடையில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கோவில் நிலத்தை மீட்க தடையில்லை'

Added : அக் 13, 2021
Share
கரூர்:''கோவில் நிலங்களை மீட்க, உயர் நீதிமன்றம் எவ்வித தடையும் விதிக்கவில்லை,'' என, திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.கரூரில் நடந்த, எறிபத்த நாயனார் பூக்குடலை விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தமிழகத்தில், திருக்கோவில்களுக்கு சொந்தமான 7 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. 5 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பட்டா உள்ளது. கரூர்

கரூர்:''கோவில் நிலங்களை மீட்க, உயர் நீதிமன்றம் எவ்வித தடையும் விதிக்கவில்லை,'' என, திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

கரூரில் நடந்த, எறிபத்த நாயனார் பூக்குடலை விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தமிழகத்தில், திருக்கோவில்களுக்கு சொந்தமான 7 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. 5 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பட்டா உள்ளது. கரூர் மாவட்டத்தில் மட்டும் 4,000 ஏக்கர் நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானவை.தொடர்ந்து 12 ஆண்டுகள் ஒரே இடத்தில் குடியிருந்தால், தனக்கு சொந்தமாகி விடும் என நினைக்கின்றனர்.

இந்த சட்ட வரையறை, ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில் நிலங்களுக்கு கிடையாது. எனவே, ஒரு துளி நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்.அறநிலைய சட்ட விதிமுறைப்படி, கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள ஏழை, எளியவர்களை வாடகைதாரர்களாக மாற்ற முடியும். கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களை மீட்க, உயர் நீதிமன்றம் எவ்வித தடையும் விதிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X