தமிழ்நாடு

துணை சுகாதார நிலையம் தொழிலாளர்கள் கோரிக்கை

Added : அக் 13, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள, சக்தி - தலநார், கருமலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், தொழிலாளர்கள், 20 கி.,மீ., தொலைவில் உள்ள வால்பாறை நகருக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. சாதாரண காய்ச்சல், சளி என்றால் கூட முறையான மருத்துவ சிகிச்சை

வால்பாறை : வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள, சக்தி - தலநார், கருமலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், தொழிலாளர்கள், 20 கி.,மீ., தொலைவில் உள்ள வால்பாறை நகருக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. சாதாரண காய்ச்சல், சளி என்றால் கூட முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.

எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'சக்தி - தலநார், கவர்க்கல், கருமலை பஜார் உள்ளிட்ட பகுதியில், துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். இதனை, கடந்த பத்து ஆண்டுளாக வலியுறுத்தி வருகிறோம். மருத்துவ வசதி இல்லாததால், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, எஸ்டேட் தொழிலாளர்களின் நலன் கருதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X