சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிரான்ஸ்பார்மர்' அமைக்க கட்டணம் கிடையாது:தீர்ப்பாயம் உத்தரவால் மின் வாரியத்துக்கு 'ஷாக்'

Added : அக் 13, 2021
Share
Advertisement
புதிய 'டிரான்ஸ்பார்மர்' அமைக்கும் செலவை மின்வாரியமே ஏற்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி, நுகர்வோரிடம் வசூலித்த, 1.50 கோடி ரூபாயை, மின் குறை தீர்ப்பாயம் உத்தரவால் திருப்பித் தர வேண்டிய கட்டாயம்மின் வாரியத்துக்கு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் பகிர்மான விதியின்படி, புதிய மின் இணைப்புகளை வழங்குவதற்கான டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், ஏபி ஸ்விட்ச் மற்றும் அவை சார்ந்த

புதிய 'டிரான்ஸ்பார்மர்' அமைக்கும் செலவை மின்வாரியமே ஏற்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி, நுகர்வோரிடம் வசூலித்த, 1.50 கோடி ரூபாயை, மின் குறை தீர்ப்பாயம் உத்தரவால் திருப்பித் தர வேண்டிய கட்டாயம்மின் வாரியத்துக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மான விதியின்படி, புதிய மின் இணைப்புகளை வழங்குவதற்கான டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், ஏபி ஸ்விட்ச் மற்றும் அவை சார்ந்த உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான செலவை மின் வாரியமே ஏற்க வேண்டும்.ஆனால், தொகுப்பு வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், 'ஷாப்பிங்' மால்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் டிரான்ஸ்பார்மர் பொருத்துவதற்கு, விண்ணப்பதாரரிடமே அதற்கான தொகை பெறப்படுகிறது.


ரூ.1.50 கோடி

இது பற்றி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நிறைய புகார்கள் சென்றன. கடந்த டிச., 24ல் சில திருத்தங்களை வெளியிட்டு, 'தமிழ்நாடு மின்சார வினியோக விதியின்படி, டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் மற்றும் அவை சார்ந்த உபகரணங்களை, மின் வாரியத்தின் செலவில்தான் அமைக்க வேண்டும்' என, தெளிவுபடுத்தியது ஆணையம்.

ஆனால், அதற்குப் பின்னும் தமிழகம் முழுதும் வளாகக் குடியிருப்புகள், தொகுப்பு வீடுகள், பெரிய கட்டடங்கள், வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் டிரான்ஸ்பார்மர்களை புதிதாக அமைப்பதற்கு, அதற்குரிய கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தது மின் பகிர்மானக் கழகம்.

கோவை, நீலம்பூரில் உள்ள ஒரு கல்வி நிறுவன வளாகத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைப்பதற்கு, 1.50 கோடி ரூபாய், மின் பகிர்மானக் கழகத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மருக்காக ஒரு புரமோட்டர் செலுத்தும் தொகை, அந்த தொகுப்பு வீடுகள் அல்லது அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கட்டப்படும் வீட்டின் மதிப்பில் கூட்டப்பட்டு, வீடு வாங்குவோரின் தலையில் சுமத்தப்படுகிறது.


மேல்முறையீடு

இது குறித்து, மின் குறை தீர்ப்பாயத்திடம், புரமோட்டர்கள், நிறுவனங்களின் நிர்வாகிகள் பலரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த மின் குறை தீர்ப்பாயம், 'மின் பகிர்மான விதிகளை மீறியும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வந்த திருத்தங்களை மீறியும், புதிய டிரான்ஸ்பார்மர்களை அமைக்க, மின் நுகர்வோரிடம் வசூலித்த அனைத்துத் தொகையையும் திருப்பித் தரவேண்டும்' என, செப்., 24ல் உத்தரவு பிறப்பித்தது.

இதனால், 1.50 கோடி ரூபாயை மின் பகிர்மானக் கழகம் திருப்பித் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகை எப்போது திருப்பித் தரப்படும் என கோவை மின் பகிர்மானக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின் வாரியத்தின் ஒப்புதலுக்கு எழுதப்பட்டுள்ளது. அங்கிருந்து பதில் கிடைத்த பின்பே, அந்தத்தொகை திருப்பித் தரப்படும்' என்றனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X