பொது செய்தி

தமிழ்நாடு

காருண்யா பல்கலையில் சுற்றுச்சூழல் மற்றும் கல்வி சேவை

Added : அக் 13, 2021
Share
Advertisement
கற்பித்தல் மற்றும் கற்றல் சூழலில் உலகத்தர பல்கலைக்கு இணையான சேவையை வழங்கி வருகிறது காருண்யா பல்கலைக்கழகம்.இது குறித்து, இப்பல்கலை நிர்வாகிகள் கூறியதாவது:இங்குள்ள, 90 சதவீத ஆசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள். பலர் ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., நிறுவனங்களில், வெளிநாட்டு பல்கலையில் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்தவர்கள். அமெரிக்க, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, போலந்து

கற்பித்தல் மற்றும் கற்றல் சூழலில் உலகத்தர பல்கலைக்கு இணையான சேவையை வழங்கி வருகிறது காருண்யா பல்கலைக்கழகம்.இது குறித்து, இப்பல்கலை நிர்வாகிகள் கூறியதாவது:

இங்குள்ள, 90 சதவீத ஆசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள். பலர் ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., நிறுவனங்களில், வெளிநாட்டு பல்கலையில் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்தவர்கள். அமெரிக்க, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, போலந்து இஸ்ரேல் போன்ற, 40 நாடுகளில் உள்ள பல்கலை கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்கியுள்ளது.கணினி தொழில்நுட்ப மையத்தில், நிபுணர் குழு உருவாக்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதற்காக, 'QS I- Gauge' சர்வதே நிறுவனம், டிஜிட்டல் கற்பித்தல் மற்றும் கற்றலில் அதிநவீன ஆன்லைன் வகுப்பறைக்கான, 'E- Lead' சான்றிதழை வழங்கியுள்ளது.நீர், உணவு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் உள்ள புதுமையான தொழில்நுட்பங்கள், செயல்முறைகள் மற்றும் தயாரிப்புகளை எங்கள் ஆய்வகங்களில் இருந்து களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்காக, 21 தொழில்நுட்ப பணிகளை நிறுவியுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 1800 425 4300 என்ற எண்ணை அழைக்கவும். மாணவர்சேர்க்கைக்கு, www.karunya.edu என்ற இணையதளத்தில் நுழையலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X