தமிழ்நாடு

தென்னை பராமரிப்பு பயிற்சி: 'அட்மா' திட்ட விவசாயிகள் பங்கேற்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டார 'அட்மா' சார்பில், காணியாலம்பாளையத்தில் விவசாயிகள் பங்கேற்ற, தென்னை ஒருங்கிணைந்த நோய் பராமரிப்பு நடவடிக்கை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சிக்கு மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குனர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் அனந்தகுமார் முன்னிலை வகித்தார். வட்டார 'அட்மா'

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டார 'அட்மா' சார்பில், காணியாலம்பாளையத்தில் விவசாயிகள் பங்கேற்ற, தென்னை ஒருங்கிணைந்த நோய் பராமரிப்பு நடவடிக்கை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குனர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் அனந்தகுமார் முன்னிலை வகித்தார். வட்டார 'அட்மா' மேலாளர் பிரியங்கா வரவேற்றார்.மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குனர், வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களான, சொட்டு நீர் பாசனம், கூட்டுப்பண்ணையம், உணவு பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் இத்திட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் மானியங்கள் குறித்து தெளிவுபடுத்தினார்.

மேலும், மாநில அரசினால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.தென்னை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் லதா பேசியதாவது:தென்னைகளில் குருத்து அழுகல் நோயால் அதிகம் காணப்படுகிறது. இளங்கன்றில் இருந்து, 10 வயதுக்குள்ளான மரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இலைகள் பழுப்பு நிறத்துக்கு மாறுவது அறிகுறியாகும். குருத்து அழுகி, மரம் முழுவதுமாக சாய்ந்து விடுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இதனை தடுக்க, போர்டோ பசை அல்லது கலவையை தயாரித்து, பாதிப்பு ஏற்பட்ட மரத்துக்கு குறிப்பிட்ட அளவு வழங்கினால், நோயை கட்டுப்படுத்த முடியும். மேலும், காப்பர் ஆக்ஸி குளோரைடு, 25 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, இளங்கன்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ள குருத்தில் ஊற்ற வேண்டும்.இவ்வாறு, பேசினார்.தொடர்ந்து, இலைப்புள்ளி, இலைகருகல் நோய், கேரள வாடல் நோய் குறித்தும் விளக்கி, அவற்றை போக்க, மருந்து செலுத்துதல் குறித்தும் விளக்கினார். தென்னை பராமரிப்பு குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X