பொது செய்தி

தமிழ்நாடு

'மவுசு' கூடும் இயற்கை வேளாண் பொருட்கள் அங்கக சான்று அதிகாரிகள் பெருமிதம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை பகுதிகளில், இயற்கை முறையில் அமைந்துள்ள வேளாண்பண்ணைகளில் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் சுப்பையா மற்றும் அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர்.அதிகாரிகள் கூறியதாவது:இயற்கை வேளாண்மை மற்றும் விளை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. உடுமலை வட்டாரத்தில், இயற்கை வேளாண் சாகுபடி அதிகரித்துள்ளதோடு, விளை
 'மவுசு' கூடும் இயற்கை வேளாண் பொருட்கள்   அங்கக சான்று அதிகாரிகள் பெருமிதம்


உடுமலை : உடுமலை பகுதிகளில், இயற்கை முறையில் அமைந்துள்ள வேளாண்பண்ணைகளில் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் சுப்பையா மற்றும் அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரிகள் கூறியதாவது:இயற்கை வேளாண்மை மற்றும் விளை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. உடுமலை வட்டாரத்தில், இயற்கை வேளாண் சாகுபடி அதிகரித்துள்ளதோடு, விளை பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நஞ்சில்லா விவசாயம் குறித்து, அங்ககச்சான்று பெற்று, ஆய்வாளர்களின் தொடர் கண்காணிப்பில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களுக்கு மதிப்பு கூடுதலாகும்.கோவையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் அங்கக சான்றுத்துறை, இயற்கை வேளாண் பயிற்சி, சான்று அளித்தல், ஆய்வு, தரம் உறுதி செய்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.உடுமலை அருகே, சடையபாளையம் பகுதியில், 26 வயதே ஆன, இளம் விவசாயி சோனிகா, என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வரும், விர்ஜின் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.வழக்கமாக தேங்காயை நன்கு உலரவைத்து, கொப்பரையாக்கி அதனை பிழிந்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

சூரிய வெப்பத்தில் தேங்காய்களை உலரவைக்கும் போதும், பிழியும் போதும் அதிகம் வெப்பம் உருவாகிறது.இதனால், தேங்காய் எண்ணெயிலுள்ள மருத்துவ குணங்கள் வீணாகும் நிலை உள்ளது. வெப்ப முறையில்லாமல் உற்பத்தி செய்யப்படும், சுத்தமான தேங்காய் எண்ணெய்யில், தாய்பாலுக்கு நிகரான, மோனோலாரிக் அமிலம் இருப்பதால், பல்வேறு மருத்துவ குணம் சிறிதும் குறையாமல் கிடைக்கிறது.இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களை மட்டுமே பயன்படுத்துவதால், நஞ்சில்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்கிறது. தமிழக அரசின் இளம் தொழிலதிபர் விருதும் பெற்றுள்ளார்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X