அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீடு தேடி கொரோனா தடுப்பூசி கோவை மாநகராட்சியில் துவக்கம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவ:வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்கோவையில்துவக்கி வைத்தார்.கோவை மாவட்டத்தில் இதுவரை, 26 லட்சம் பேருக்கு முதல் தவணை, 9.97 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத் திறனாளிகள், நோயால் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கி இருப்போரை தேடிச் சென்று, தடுப்பூசி போட
 வீடு தேடி கொரோனா தடுப்பூசி கோவை மாநகராட்சியில் துவக்கம்

கோவ:வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்கோவையில்துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் இதுவரை, 26 லட்சம் பேருக்கு முதல் தவணை, 9.97 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத் திறனாளிகள், நோயால் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கி இருப்போரை தேடிச் சென்று, தடுப்பூசி போட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, மண்டலத்துக்கு ஒன்று வீதம் ஐந்து, 'மொபைல் யூனிட்'டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவையில் நேற்று இத்திட்டத்தை துவக்கி வைத்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:மாநில எல்லைகளை கண்காணித்து, தொடர் நடவடிக்கை எடுத்ததால், தொற்று பரவல் குறைந்திருக்கிறது. கோவையில் 87 சதவீதத்தினருக்கு முதல் தவணை, 37 சதவீதத்தினருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி, மாநில பட்டியலில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

மெகா சிறப்பு முகாம் ஐந்து நாட்கள் நடத்தியதில், 5.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஒருவர் கூட விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக, வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் 'மொபைல் யூனிட்' திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


அம்மா கிளினிக் மூடல்

கோவை அரசு மருத்துவமனையில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிறப்பு குழந்தைகள் கவனிப்பு பிரிவை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''பிறந்து 28 நாட்களுக்குள்ளாக வெவ்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் குழந்தைகள், சிறப்பு கவனிப்பு மையத்தில் பராமரிக்கப்படுவர். 'அம்மா கிளினிக்' ஒரு குறுகிய காலத் திட்டம். ''அத்திட்டம் முடிவடைந்து விட்டது. அதில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X