பொது செய்தி

தமிழ்நாடு

தேவர் ஜெயந்தி விழா கட்டுப்பாடு தளர்த்த அமைப்பினர் வலியுறுத்தல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் இணைந்து அக்., 30 தேவர் ஜெயந்தி விழாவன்று கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என மனு அளித்துள்ளனர்.மனுவில் கூறியுள்ளதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவிற்கு வருகை தரும் வெளிமாவட்ட வாகனங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் வாகன அனுமதிசீட்டு வழங்க வேண்டும். கடந்தாண்டு அக்.,29ல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் இணைந்து அக்., 30 தேவர் ஜெயந்தி விழாவன்று கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

மனுவில் கூறியுள்ளதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவிற்கு வருகை தரும் வெளிமாவட்ட வாகனங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் வாகன அனுமதிசீட்டு வழங்க வேண்டும். கடந்தாண்டு அக்.,29ல் ராமநாதபுரத்தில் மட்டும் வாகன அனுமதிசீட்டு வழங்கபட்டதால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தினர் பலர் செல்ல முடியவில்லை. பொங்கல் வைக்க, முளைப்பாரி ஊர்வலம், அன்னதானம் வழங்க அனுமதிக்க வேண்டும்.

அக்டோர் 28,29,30 ஆகிய நாட்களில் கிராமங்கள்தோறும் தேவரின் புகைப்படம், பொங்கல் வைத்து வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.தென்நாடு மக்கள் கட்சி நிறுவனர் கணேசத்தேவர், முக்குலத்தேவர் புலிப்படை பொதுசெயலாளர் பாண்டித்துரைதேவர், பசும்பொன் தென்னிந்திய பார்வர்டுபிளாக், அகில இந்திய முக்குலத்தேவர் பாசறை, உள்ளிட்ட அமைப்பினர் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X