ராமநாதபுரத்தில் போக்குவரத்து நெரிசல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
---ராமநாதபுரம் : ஆயுதபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். மேலும் ரோட்டோர வியாபாரம் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.ராமநாதபுரம் நகர் அரண்மனைபகுதி அக்ரஹாரவீதி, தலைமை அஞ்சலக ரோடு, சாலைத்தெரு, அரண்மனை மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் ஏராளமாக வணிக வளாகங்கள் உள்ளன. இதனால் எப்போதுமே

---ராமநாதபுரம் : ஆயுதபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். மேலும் ரோட்டோர வியாபாரம் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

ராமநாதபுரம் நகர் அரண்மனைபகுதி அக்ரஹாரவீதி, தலைமை அஞ்சலக ரோடு, சாலைத்தெரு, அரண்மனை மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் ஏராளமாக வணிக வளாகங்கள் உள்ளன. இதனால் எப்போதுமே இப்பகுதியில் கூட்ட நெரிசல் காணப்படும். இந்த நிலைமையில் இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு, வாழைமரங்கள், பழங்கள், பொரி, அலங்காரப்பொருட்கள் விற்பனை நடந்தது.

அரண்மனை ரோடு, சாலைத்தெரு, அக்ரஹாரவீதிகளில் ரோட்டோர கடைகள் அதிகமாகியுள்ளன. இருபுறத்திலும் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பஸ், சரக்கு லாரி போன்ற கனரக வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். ஆகையால் விழாக்காலங்களில் மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த கூடுதலாக போலீசாரை நியமிக்க எஸ்.பி., கார்த்திக் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X