பொது செய்தி

தமிழ்நாடு

தொழில், கல்வி, வர்த்தகத்தில் சரஸ்வதி பூஜை

Added : அக் 13, 2021
Share
Advertisement
சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமித் திருநாட்களை, உழைப்பின் நகரமான திருப்பூரின் சாதனை வெற்றிக்குக் கட்டியம் கூறும் நாட்களாக கருதலாம்.கொரோனா இரண்டாவது அலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட திருப்பூர், அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டது.அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகளவில் வரத் துவங்கியிருப்பது, சிறந்த அறிகுறியாக

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமித் திருநாட்களை, உழைப்பின் நகரமான திருப்பூரின் சாதனை வெற்றிக்குக் கட்டியம் கூறும் நாட்களாக கருதலாம்.

கொரோனா இரண்டாவது அலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட திருப்பூர், அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டது.அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகளவில் வரத் துவங்கியிருப்பது, சிறந்த அறிகுறியாக உள்ளது.

உள்நாட்டு உற்பத்தி ஆர்டர்களும் அதிகளவில் வருகின்றன.வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்களும் பணிக்குத் திரும்பியிருப்பதால், இனி தடையின்றி, உற்பத்தி நடைபெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.சம்பளப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருக்கிறது. தொழிலாளர்கள் புதிய சம்பளத்தைப் பெறுகின்றனர்.பின்னலாடைத் தொழில் என்றல்லாது பிற தொழில்களும் மீண்டெழுகின்றன.கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க, தடுப்பூசியே சிறந்த கேடயம். பின்னலாடைத் தொழிலாளர் பெரும்பாலானோர், தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியோர் சதவீதம் அதிகம் உள்ள மாவட்டமாகவும், மாநகரமாகவும், திருப்பூர் திகழ்கிறது.தற்போது, பின்னலாடைத் தொழில் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கத் துவங்கியிருக்கிறது. இந்த வளர்ச்சி தொடர வேண்டும் என்றால், இடையறாத உழைப்பு அவசியம் தேவைப்படுகிறது. இத்துடன் புத்தாக்கங்களையும் தொடர வேண்டியுள்ளது.ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் என்ற இலக்கை நோக்கி, பின்னலாடைத்துறை நம்பிக்கையுடன் நகர்கிறது.கல்வி நிலையங்கள்கொரோனா காலத்தில், கல்வி நிறுவனங்கள் முடங்கின. ஒன்பது முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் துவங்கியுள்ளது.

நவ., 1 முதல், ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்புகளும் செயல்பட உள்ளன.ஆன்லைன் வகுப்புகளை மட்டுமே எதிர்கொண்ட மாணவர்கள், சோர்ந்து போயிருக்கின்றனர். விளையாட்டுகளில் இருந்தும் மாணவர்கள் ஒதுங்கியிருக்க வேண்டிய காலகட்டமாக கொரோனா காலம் கழிந்தது.தற்போது வகுப்புகள் துவங்குவதால், புதிய நம்பிக்கை, மாணவர்களிடம் பளிச்சிடுகிறது. பெற்றோர்களிடமும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.கல்வி நிலையங்கள், வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, மாணவர்கள் வருகையை எதிர்நோக்கத் தற்போதே துவங்கியிருக்கின்றன.இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருப்பூர் பகுதி, கல்வியில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற்றிருக்கவில்லை. ஆனால், தற்போது, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மாநில அளவில் முதலிடம் வகிக்கும் அளவுக்கு வியத்தகு வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கு, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரின் கடும் உழைப்பும், மாணவர்களின் தன்னம்பிக்கை தளரா விடாமுயற்சியும் காரணங்கள்.கல்வி என்ற அடித்தளம் வலுவானதாக இல்லாவிட்டால், இளம் சமுதாயம் சாதிக்க முடியாது. கல்வியில் சாதிக்க, சரஸ்வதி பூஜை, விஜயதசமித் திருநாட்கள் மாணவர்களுக்கான வெற்றித் துவக்கமாக அமையட்டும்.களைகட்டும் வர்த்தகம்கடந்த ஞாயிறு முதல், திருப்பூரில் கடைவீதிகள் களைகட்டத் துவங்கியிருக்கின்றன. தீபாவளிக்கு ஜவுளி வாங்குவது உள்பட பல்வேறு பொருட்களை மக்கள் வாங்குவதால், வர்த்தகம் களைகட்டுகிறது.வர்த்தக நிறுவனங்கள், நீண்ட நாள் கழித்து, சிறந்த வர்த்தகத்தை எதிர்நோக்கிப் பயணத்தைத் துவக்கியிருக்கின்றன. அதற்கேற்ப வணிகமும் தற்போதே களைகட்டத் துவங்கியிருக்கின்றன.கொரோனா இரண்டாவது அலை பல்வேறு பாடங்களை வணிகம் மற்றும் தொழில்துறையினருக்குக் கற்றுக்கொடுத்தது. இவற்றைப் படிப்பினைகளாக உணர்ந்து, காலத்திற்கேற்ப மாற்றங்களை மேற்கொண்டு, தொழில் மற்றும் வர்த்தகத்தில் வெற்றிப்பாதையை நோக்கிப் பயணிக்கிறது, திருப்பூர்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X