தகுதி இல்லாத நபருக்கு பட்டா; ஊராட்சித் தலைவர் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தகுதி இல்லாத நபருக்கு பட்டா; ஊராட்சித் தலைவர் புகார்

Added : அக் 13, 2021
Share
ராமநாதபுரம் : மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரமக்குடி தாலுகா முதலுார் ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வி, அரசு புறம்போக்கு இடத்தை தகுதியில்லாத நபருக்கு பட்டா வழங்கியுள்ளதாக புகார் அளித்துள்ளார்.மனுவில் கூறியுள்ளதாவது: முதலுார் ஊராட்சிக்குட்பட்ட 12 சென்ட் அரசு புறம்போக்கு இடத்தை தனிநபர் ஒருவருக்கு பட்டா வழங்கியுள்ளனர். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், நிலம்

ராமநாதபுரம் : மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரமக்குடி தாலுகா முதலுார் ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வி, அரசு புறம்போக்கு இடத்தை தகுதியில்லாத நபருக்கு பட்டா வழங்கியுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

மனுவில் கூறியுள்ளதாவது: முதலுார் ஊராட்சிக்குட்பட்ட 12 சென்ட் அரசு புறம்போக்கு இடத்தை தனிநபர் ஒருவருக்கு பட்டா வழங்கியுள்ளனர். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், நிலம் இல்லாதவர்களுக்கு நிரந்தரமாக ஊரில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கலாம். ஆனால் எந்தவொரு அடிப்படை தகுதி இல்லாத, அதிக சொத்துடைய நபருக்கு புறம்போக்கு இடத்தை பட்டா கொடுத்துள்ளனர். ஆகையால் பட்டா மாறுதல் செய்ததை மாற்ற கலெக்டர்(பொ), டி.ஆர்.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.---------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X