பொது செய்தி

தமிழ்நாடு

பொரி விலை உயர்வு

Added : அக் 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியூர்களிலிருந்து பொரி விற்பனைக்கு வந்துள்ளது. விலை உயர்வு, எதிர்பார்த்த விற்பனையின்றி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் பகுதியில் திண்டுக்கல், மதுரை மேலுார் ஆகிய பகுதிகளிலிருந்து பொரியை மொத்தமாக வாங்கிவந்து விற்பனை செய்கின்றனர். தற்போது ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி மூடை, மூடையாக வந்துள்ளது. விழாநேரம் தேவை

ராமநாதபுரம் : ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியூர்களிலிருந்து பொரி விற்பனைக்கு வந்துள்ளது. விலை உயர்வு, எதிர்பார்த்த விற்பனையின்றி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் பகுதியில் திண்டுக்கல், மதுரை மேலுார் ஆகிய பகுதிகளிலிருந்து பொரியை மொத்தமாக வாங்கிவந்து விற்பனை செய்கின்றனர். தற்போது ஆயுதபூஜையை முன்னிட்டு பொரி மூடை, மூடையாக வந்துள்ளது. விழாநேரம் தேவை அதிகரிப்பால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருலிட்டர் ரூ.6 முதல் ரூ.8 வரை விற்ற பொரி தற்போது ரூ.10க்கு விற்கிறது.எதிர்பார்த்த விற்பனை இல்லை, ஒருலிட்டர் அவல் ரூ.50க்கு விற்கிறோம். பெயரளவில் மக்கள் வாங்குகின்றனர், அதிக முதலீட்டை எடுப்பது சிரமம் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.-----

பூக்கள் விலை உயர்வுராமநாதபுரத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்தது.இன்று(அக்.14) ஆயுத பூஜை என்பதால் நேற்று ராமநாதபுரம் பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகம் இருந்தது. வழக்கமாக கிலோ ரூ.600க்கு விற்ற மல்லிகை ரூ.1800க்கு விற்றது. கனகாம்பரம் 1200, ஜாதிமல்லி 1000, பிச்சிப்பூ 1000, செவ்வந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் கிலோ 300 முதல் 400 வரை விற்றது.பூக்கள் விலை உயர்வால் மக்கள் தவித்தனர். மேலும், ஆயுத பூஜைக்கான வாழைக்கன்றுகள் வரத்தும் நேற்று குறைவாகவே இருந்ததால் இரண்டு கன்றுகள் ரூ20 முதல் 30 வரை விற்றன.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X