பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் பணி கேட்கும் 21 சீனியர் ஆயுதப்படை போலீசார்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 21 சீனியர் ஆயுதப்படை போலீசார் உள்ளூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களில் நியமனம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.பிற மாவட்டங்களில் 2010ல் ஆயுதப்படையில் சேர்ந்து 11 ஆண்டுகளாக முதல்நிலை காவலராக பணியாற்றும் 21 பேர் ராமநாதபுரம் ஆயுதப்படையில் 10 மாதங்களுக்கு முன் பணி மாறுதலில் வந்தனர். இவர்கள் கூறியதாவது: ராமநாதபுரம் ஆயுதப்படை போலீசாரில் நாங்கள் தான்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 21 சீனியர் ஆயுதப்படை போலீசார் உள்ளூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களில் நியமனம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற மாவட்டங்களில் 2010ல் ஆயுதப்படையில் சேர்ந்து 11 ஆண்டுகளாக முதல்நிலை காவலராக பணியாற்றும் 21 பேர் ராமநாதபுரம் ஆயுதப்படையில் 10 மாதங்களுக்கு முன் பணி மாறுதலில் வந்தனர். இவர்கள் கூறியதாவது: ராமநாதபுரம் ஆயுதப்படை போலீசாரில் நாங்கள் தான் சீனியர்.தாலுகா போலீஸ் ஸ்டேஷன் பணிமாறுதல் கேட்டுவிண்ணப்பித்தோம்.

போலீஸ் ஸ்டேஷன் பணி குறித்த 45 நாள் பயிற்சியும் முடித்துள்ளோம். இதையடுத்து ஸ்டேஷன் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எட்டு ஆண்டு ஜூனியர்களுக்கு எஸ்.பி., கார்த்திக் போலீஸ் ஸ்டேஷன்களில் பணி மாறுதல் அளித்து வருகிறார். நாங்கள் பணியில் சேர்ந்து பத்து ஆண்டு நிறைவு பெற்று வயதும் 38 ஆகிவிட்டது. வயதான தாய், தந்தை மற்றும் குடும்பத்தினரை அருகில் இருந்து பார்க்க முடியாமல் தவிக்கிறோம். எனவே, சீனியரான எங்களை போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்.பி., கார்த்திக் கூறுகையில், இவர்கள் பிற மாவட்டங்களில் இருந்து 2021 தேர்தலின் போது தான் ராமநாதபுரம் மாவட்டம் வந்தனர். அவர்கள் பணிபுரிந்த மாவட்டங்களில் ஸ்டேஷன் பணி பெற்றிருக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் 60 பேருக்கு 2017 ல் ஸ்டேஷன் பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் இவர்கள் 21 பேருக்கு இப்போது தான் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இதனால் 2017 ல் மாவட்ட சீனியாரிட்டியில் உள்ளவர்களுக்கு மாறுதல் வழங்கப்படுகிறது. அதன் பிறகே இவர்களுக்கு வழங்க முடியும். இது எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரச்னை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X