ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 13, 2021
Share
ராமேஸ்வரம் : இலங்கையில் மூழ்கிய படகிற்கு நிவாரணம் வழங்கிட கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இலங்கை சிறைபிடித்து அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்த 150 படகுகளை துரிதமாக தமிழகம் அனுப்பாமல், பராமரிப்பின்றி இலங்கை கரையில் மூழ்கியதால், அப்படகின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்கிடவும், டீசல் விலை உயர்வால் தொடர்ந்து மீன்பிடிக்க செல்ல முடியாத சூழல் உள்ளதால்,

ராமேஸ்வரம் : இலங்கையில் மூழ்கிய படகிற்கு நிவாரணம் வழங்கிட கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இலங்கை சிறைபிடித்து அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்த 150 படகுகளை துரிதமாக தமிழகம் அனுப்பாமல், பராமரிப்பின்றி இலங்கை கரையில் மூழ்கியதால், அப்படகின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்கிடவும், டீசல் விலை உயர்வால் தொடர்ந்து மீன்பிடிக்க செல்ல முடியாத சூழல் உள்ளதால், உற்பத்தி விலைக்கு டீசல் வழங்கிடவும், ராமேஸ்வரம் மீன்துறையினர் நிறுத்தி வைத்த 19 படகுகளை ஆய்வு செய்து மீன்பிடி அனுமதி சீட்டு, மானிய டீசல் வழங்கிட கோரி அக்.,9 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல், வேலை நிறுத்தம் செய்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், எமிரேட், பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X