பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சியில் தன்னாட்சி தேவை!

Added : அக் 13, 2021
Share
Advertisement
''பொதுமக்களின் குரல், இறைவனின் குரல் ஆகும்'' என்கிறார், தேசப்பிதா காந்தியடிகள்.பொதுமக்களின் குரல், உள்ளாட்சிகளில் ஒலிக்க வேண்டும். இதற்கு, வழி ஏற்படுத்தியதுதான் 'பஞ்சாயத்து ராஜ்'அதிகாரப்பகிர்வு இல்லாமல், உள்ளாட்சிகள் சிறக்காது. ''கிராமத்திற்குத் தன்னாட்சி தேவை; சுதந்திர இந்தியாவில், கிராமங்கள், ஒரு குடியரசு அமைப்பாக செயல்பட வேண்டும்; கிராம சுயராஜ்யமே,

''பொதுமக்களின் குரல், இறைவனின் குரல் ஆகும்'' என்கிறார், தேசப்பிதா காந்தியடிகள்.பொதுமக்களின் குரல், உள்ளாட்சிகளில் ஒலிக்க வேண்டும்.

இதற்கு, வழி ஏற்படுத்தியதுதான் 'பஞ்சாயத்து ராஜ்'அதிகாரப்பகிர்வு இல்லாமல், உள்ளாட்சிகள் சிறக்காது. ''கிராமத்திற்குத் தன்னாட்சி தேவை; சுதந்திர இந்தியாவில், கிராமங்கள், ஒரு குடியரசு அமைப்பாக செயல்பட வேண்டும்; கிராம சுயராஜ்யமே, நாட்டின் அடிப்படை நிர்வாக அமைப்பாக இருக்க வேண்டும்' என்பது காந்தியின் கனவு.ஊராட்சிகள் சட்டம்கடந்த 1992ல்தான் இதற்கான அரசியல் சாசன அங்கீகாரம் கிடைத்தது.

கடந்த 1994ல் 73வது சட்டத் திருத்தத்தின்படி தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் இயற்றப்பட்டது.இதன் மூலம், கிராம சபாக்களுக்கு அங்கீகாரம், மூன்றடுக்கு ஊராட்சி முறை, தாழ்த்தப்பட்டோர், பெண்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்க வழி ஏற்பட்டது.நிலையான பொருளாதார வளர்ச்சி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கட்டாய உள்ளாட்சித் தேர்தல், மாநிலத் தேர்தல் ஆணையம், நிதி ஆணையம், ஊராட்சி களுக்குரிய அதிகாரம், திட்டமிடும் அதிகாரம் அனைத்தும் வழங்கப்பட்டன.பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் வரையறுக்கப்பட்டன. நிர்வாக அதிகாரம் மக்களுக்கு அளிக்கப்பட்டது.கிராம சபா கூட்டங்கள்கிராம நிர்வாகத்தில் மக்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும்.

ஆண்டுக்கு நான்கு நாட்களும், தேவைப்படும்போதும், தற்போது கிராமசபா கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.கிராமத் தேவைகள், பிரச்னைகள், வரவு செலவுக் கணக்குகளை, மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களுடன் கூடி விவாதித்து முடிவெடுக்கின்றனர்.கிராமத்தைப் பாதிக்கும் எந்த ஒரு விஷயத்துக்காகவும் மக்கள் ஒன்றுகூடி கிராமசபாவில் தீர்மானம் நிறைவேற்ற முடியும்.கிராமசபா கூட்டத்தில் மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது. ஆனால், மக்களிடம் கேட்கப்படும் கருத்துகள், கிராமசபா தீர்மானங்கள் செயல்படுத்தப்படுவதில்லை என்பது இன்றளவும் கசப்பான உண்மை. அரசியல் சாசனத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியம்;யதார்த்தம் இதுதான்பெரும்பான்மையான மக்கள் கலந்துகொள்ளாமல் பெயரளவில் நடத்தப்படும் கூட்டங்களாகவே கிராமசபைக் கூட்டங்கள் இருக்கின்றன என்பதே யதார்த்தம்.உரிய கோரம் இன்றி அவை நடத்தி முடிக்கப்படுகின்றன. மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததும், அதிகார வர்க்கத்தினர் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது மே இதற்குக் காரணங்கள்.ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்;

இது முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.மக்கள் இயக்கமாகட்டும்இன்னமும் நகர்ப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதன் காரணமாக 9 மாவட்டங்களில் கிராம உள்ளாட்சித் தேர்தல் தற்போதுதான் நடந்து முடிந்துள்ளது.'உள்ளாட்சியில் தன்னாட்சி'என்பது ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும். பஞ்சாயத்து ராஜ் வலுப்படுவதை மக்கள் இயக்கமாக உறுதிசெய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X